கஸ்டமர் வீட்டில் திருடிய உணவு டெலிவரி செய்ய வந்த நபர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!

பெங்களூரில் ஜொமைட்டோ ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்ய வந்த கஸ்டமர் வீட்டில் திருடிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ஜொமைட்டோ நிறுவனம் இதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

பெங்களூரில் எல்லா பத்திரிகையாளர் ஆதித்யா என்பவரது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய வந்த ஜொமைட்டோ ஊழியர் ஒருவர் கதவின் வெளியே ஏற்கனவே இன்னொரு உணவு பொருள் டெலிவரி செய்யப்பட்டு இருந்ததை பார்த்தார்.

இதனை அடுத்து தான் டெலிவரி செய்ய வந்த உணவு பொருளை கதவின் அருகில் வைத்துவிட்டு அங்கு ஏற்கனவே இருந்த உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு சென்ற காட்சி சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதை பார்த்த வீட்டில் உரிமையாளர் இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து அதனை ஜொமைட்டோ நிறுவனத்திற்கும் டேக் செய்து புகாராக அளித்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி உணவு டெலிவரி செய்ய வந்த ஜொமைட்டோ ஊழியருக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதனை அடுத்து ஜொமைட்டோ நிறுவனம் தங்களுடைய ஊழியரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உறுதி அளித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிசிடிவி கேமராக்கள் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் தற்போது பெருநகரங்களில் உள்ள நிலையில் எந்த துணிச்சலில் இந்த மாதிரி தைரியமாக திருட முற்படுகின்றனர் என்று நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

video link  : https://x.com/htTweets/status/1805900625126805797