இன்று இந்தியாவின் 25வது கார்கில் போர் வெற்றி தினம்… வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்ட சரித்திரம்…

கார்கில் போர் என்பது 1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய போராகும். இந்தியாவின் ஜம்மு- காஷ்மீரில் இருக்கும் கார்கில் என்ற இடத்தை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முற்பட்டபோது போர் மூண்டது. 1999…

Karkil War

கார்கில் போர் என்பது 1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய போராகும். இந்தியாவின் ஜம்மு- காஷ்மீரில் இருக்கும் கார்கில் என்ற இடத்தை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முற்பட்டபோது போர் மூண்டது.

1999 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பித்த இந்த போர் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போரானது மிகப்பெரிய மலைத்தொடரான டைகர் மலையில் நடைபெற்றது. இதுவரை நடந்த போர்களில் அணு ஆயுத சக்தியுடைய இரண்டு நாடுகளுக்கு இடையே நடத்த நேரடி போர் கார்கில் போர் ஆகும்.

இந்த கார்கில் போரில் சுமார் 3000 இராணுவ வீரர்கள் கலந்துக் கொண்டனர். அதில் 1700 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 500 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 1 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. 1 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்த இந்த கார்கில் போரில் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் பின்னடைந்து போரில் இருந்து பின்வாங்கியது. ஜூலை 26 ஆம் தேதி கார்கிலை கைப்பற்றி இந்தியா மாபெரும் வெற்றிப் பெற்றது. இந்திய நாட்டைப் பார்த்து உலகமே வியந்தது.

கார்கில் போர் நடக்கும் போது இந்திய நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவர் வீரர்களை கவுரவித்தார். இந்த ஆண்டு கார்கில் போர் நடந்து முடிந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அரசாங்கத்தால் முக்கியமான நாளாக கருதி வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவர். இந்திய வரலாற்றில் இந்த கார்கில் போர் ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.