நம்பர் ஒன் நாட்டிடம் மோதி வெற்றி பெற்ற இந்தியா.. டிரம்பை லெப்ட் ஹேண்டால் டீல் செய்த மோடி.. 84 நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்காவால் இந்தியாவை அசைக்க முடியாது.. இந்தியாடா..

சமீபத்தில், இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் நாட்டின் அயல்நாட்டு கொள்கை மற்றும் பொருளாதாரம் குறித்து ஒரு விரிவான நேர்காணலில் பங்கேற்றார். இந்த நேர்காணலில், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகள், ரஷ்யாவுடனான எண்ணெய்…

modi trump 1

சமீபத்தில், இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் நாட்டின் அயல்நாட்டு கொள்கை மற்றும் பொருளாதாரம் குறித்து ஒரு விரிவான நேர்காணலில் பங்கேற்றார். இந்த நேர்காணலில், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகள், ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகம், இந்தியா – ஆப்பிரிக்கா உறவுகள், மற்றும் இந்தியா – சீனா உறவுகள் குறித்து அவர் பேசியுள்ளார்.

பொருளாதார வலிமை மற்றும் புதிய வர்த்தகத் தடைகள்

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்கள் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாக அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் தெரிவித்தார். புதிய வர்த்தக தடைகளால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சவால்களை சமாளித்து, இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவானதாக இருக்கும் என்பதில் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “நாங்கள் அனைத்து கால சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்,” என்று அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் கூறினார்.

ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகம்

இந்தியாவின் முன்னுரிமை எப்போதும் எரிசக்தி பாதுகாப்பே என்று அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். நாட்டின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய எந்த நாட்டில் இருந்தும் எரிசக்தியை வாங்குவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம், இந்த எரிசக்தி பாதுகாப்புக் கொள்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா – ஆப்பிரிக்கா உறவுகள்

இந்தியா, ஆப்பிரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் 64 ஆப்பிரிக்க நாடுகளும் 17 ஆப்பிரிக்கா அல்லாத நாடுகள் என மொத்தம் 84 நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் குறிப்பிட்டார். இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), இந்திய மற்றும் ஆப்பிரிக்க வணிகங்களை ஒன்றிணைப்பதில் பாராட்டுக்குரிய பணியை செய்து வருவதாக அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஏற்கனவே 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிவிட்டதாகவும் அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்தியா – சீனா உறவுகள்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், இந்திய பிரதமர் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகவும் இந்த பயணத்தின்போது அரசியல் மற்றும் வணிக சூழல் மாறுவதற்கான வாய்பு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் அவர்களின் பேட்டியின் மூலம் இந்தியா நாட்டின் நலன்களை பாதுகாக்க உறுதியாக இருப்பதையும், உலகளாவிய சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.