இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனாவை ஒண்ணு சேர்த்துட்டிங்க டிரம்ப்.. இனி நீங்க நினைச்சாலும் பிரிக்க முடியாது.. சொந்த காசில் சூன்யம் வைத்து கொண்ட டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரிவிதிப்பு தாக்குதலை தொடங்கியபோது உலகம் முழுவதும் ஒரு பரபரப்பில் இருந்தது. முதல்கட்டமாக சீனா முக்கிய இலக்காக கருதப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. டிரம்ப்பின்…

brics 1

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரிவிதிப்பு தாக்குதலை தொடங்கியபோது உலகம் முழுவதும் ஒரு பரபரப்பில் இருந்தது. முதல்கட்டமாக சீனா முக்கிய இலக்காக கருதப்பட்டது. ஆனால், சில மாதங்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள், பொருளாதார இலக்குகளை தாண்டி, புவிசார் அரசியல் மற்றும் ராஜதந்திர நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. இதன் விளைவாக, அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும், நட்பு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் பிற நட்பு நாடுகளின் நிலை
.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள ஜனநாயக நாடுகளான இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை தற்போது அமெரிக்காவின் அதிகபட்ச வரிகளை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, இந்தியா மற்றும் பிரேசில் 50% வரிவிதிப்பை சந்திக்கின்றன. இது, டிரம்ப் தனது கொள்கைகளை, நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்றி, உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கிறார் என்பதை உணர்த்துகிறது. உதாரணமாக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கனடாவுக்கு 35% வரியையும், பிரேசில் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக 50% வரியையும் எதிர்கொள்கின்றன.

ரஷ்யா மற்றும் சீனாவிற்குச் சாதகமான சூழல்

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்காக ரஷ்யாவுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யா அமெரிக்காவின் வரிவிதிப்பிலிருந்து தப்பித்துள்ளது. அதேபோல், சீனா, அமெரிக்காவிற்கு பதிலடி வரி விதித்த போதிலும், இப்போது அமெரிக்காவுடன் ஒரு நல்ல இணக்கமான நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தான் இந்தியாவுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கு விதிக்கப்படும் அதிகபட்சமான வரிகள் ரஷ்யா மற்றும் சீனாவுடன் மேலும் நெருக்கமாக்கும் சாத்தியக்கூறுகளை அமைத்துள்ளன.

இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு அச்சுறுத்தல்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் ஜனநாயக, இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் அடிப்படையில் ஒரு வலுவான உறவை வளர்த்து வந்தன. ஆனால், டிரம்ப்பின் தற்போதைய கொள்கைகள் இந்த உறவை கேள்விக்குறியாக்கியுள்ளன. டிரம்ப்பின் வர்த்தக கொள்கை, உள்நாட்டு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், கூட்டாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததாலும், அமெரிக்காவிற்கு எதிரான கூட்டு அதிருப்தியை உருவாக்கி, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் நெருங்கி வருவதற்கு வழி வகுத்துள்ளது.