15 ஆண்டுகளில் சீனா செய்த வேலையை 14 நாட்களில் முடித்த இந்திய பொறியாளர்கள்.. இருளில் தவித்த ஆப்பிரிக்க நாட்டிற்கு ஒளிவிளக்கு ஏற்றி வைத்த மோடி.. சீனா அதிர்ச்சி.. ஓடி ஓடி உதவி செய்யும் இந்தியா.. இதுதாண்டா இந்தியா..!

சமீபத்தில் ஒரு சர்வதேச கருத்தரங்கில், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ என்ற நாட்டை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர், தனது நாட்டில் இந்தியா மேற்கொள்ளும் ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டம் குறித்து பேசியது…

burkino faso

சமீபத்தில் ஒரு சர்வதேச கருத்தரங்கில், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ என்ற நாட்டை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர், தனது நாட்டில் இந்தியா மேற்கொள்ளும் ஒரு மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டம் குறித்து பேசியது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா எவ்வாறு ஒரு புதிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது என்பதை அவர் விவரித்தார்.

புர்கினா பாசோவில் 15 வருடங்களுக்கு முன், சீன அதிகாரிகள் சாகெல் மெகா அணை திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த அணை 6,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, நாடு முழுமைக்கும் மின்சாரம் வழங்குவதோடு, மாலி, கானா, நைஜீரியா போன்ற அண்டை நாடுகளுக்கும் மின்சாரத்தை விற்க உதவும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும், 2 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனம் அளித்து, 200,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், 15 வருடங்களாக, “சாத்தியக்கூறு ஆய்வுகள்,” “நிதி மறுஆய்வுகள்,” “தொழில்நுட்ப சவால்கள்,” “கோவிட்-19 இடையூறுகள்” என பல்வேறு காரணங்கள் கூறி சீனா இந்த திட்டத்தை தாமதப்படுத்தியது. இறுதியாக, சீன அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையும் நிறுத்தினர். புர்கினா பாசோ மக்கள் நம்பிக்கையிழந்து, இருளில் வாடினர்.

இந்நிலையில், அந்நாட்டின் முக்கியப் பிரமுகர் ஒருவர் இந்தியாவை தொடர்பு கொண்டார். “சீனா விளக்கங்களை அளித்தபோது, இந்தியா பொறியாளர்களை அனுப்பியது. சீனா ஆய்வுகளை அளித்தபோது, இந்தியா தீர்வுகளை கொண்டு வந்தது. சீனா ‘நாளை’ நாளை என்று இழுத்தடித்த நிலையில் இந்தியா ‘நேற்றே வேலையை தொடங்கியது” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியப் பொறியியல் குழு, சீனாவால் 15 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளை வெறும் 14 நாட்களில் மதிப்பீடு செய்து, ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியது. அவர்கள் வெறும் 6,000 மெகாவாட் அணைக்கு பதிலாக, 8,500 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய விரிவான திட்டத்தை முன்மொழிந்தனர். இதில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டங்களும் உள்ளடக்கம்.

இந்திய நிறுவனங்களான லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், மற்றும் டாடா பவர் போன்ற நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பொறுப்புடன் பங்கேற்றன. மொத்த $24 பில்லியன் ஒப்பந்தத்தில், எந்தவிதமான சீன நிறுவனமும் இடம்பெறவில்லை. மேலும், இந்த திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு டாலரும் எவ்வாறு செலவிடப்படும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

$15 பில்லியன் – அணை மற்றும் மின் கட்டமைப்புக்கு.

$4 பில்லியன் – பிராந்திய மின் இணைப்புகளுக்கு.

$3 பில்லியன் – பாசன அமைப்புகளுக்கு.

$2 பில்லியன் – மின்சாரம் மூலம் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு.

இந்த முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, விவசாய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்து, ஒட்டுமொத்த மேற்கு ஆப்பிரிக்காவையும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்த செய்தி அறிந்தவுடன், சீனாவுக்கு இது பொருளாதார தற்கொலை என அந்நாட்டு அரசு ஊடகங்கள் விமர்சித்தன. 48 மணி நேரத்தில் மூன்று அவசரகால குழுக்கள் புர்கினா பாசோவுக்கு அனுப்பப்பட்டன. $30 பில்லியன் மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தையும் சீனா முன்மொழிந்தது. அதற்கு, “15 ஆண்டுகளாக இந்த திறன்கள் எங்கே இருந்தன?” என்று புர்கினா பாசோ அதிகாரிகள் கேட்க, சீன அதிகாரிகளிடம் பதில் இல்லை. இது, சீனா ஆப்பிரிக்காவை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவே இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.

புர்கினா பாசோவின் இந்த முடிவு, ஆப்பிரிக்க நாடுகள் சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்திற்கு மாற்று வழிகளை தேடத் தொடங்கியுள்ளதை காட்டுகிறது. இந்திய பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக புர்கினா பாசோ இளைஞர்களுக்கு மாற்றி வருவதால், எதிர்காலத்தில் அந்நாடு தனது சொந்த உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தும் திறன் பெறும். இதன் மூலம் ஆப்பிரிக்கா தனக்கு தேவையான வளர்ச்சியை தானே உருவாக்கிக் கொள்ளும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.