இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

Published:

 

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தில் புஜ் மற்றும் அகமதாபாத் இடையிலான முதல் வந்தே பாரத் ரயில் சேவையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வாரணாசி மற்றும் டெல்லி இடையே 20 பெட்டிகளுடன் கூடிய 5 வந்தே பாரத் ரயில் சேவையையும் அவர் திறந்து வைத்தார்.

இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரயில், புஜ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பயணிகள் மத்தியில் உற்சாக வரவேற்பை பெற்றது. பிரதமர் மோடி ரயிலைத் திறந்து வைத்தவுடன் ஆரவாரத்துடன் அது கிளம்பியது.

நமோ பாரத் ரயில் என்று அழைக்கப்படும் இந்த வந்தே மெட்ரோ ரயில் சேவை பற்றி பிரதமர் பேசும்போது, “இந்த ரயில் தினசரி முக்கிய நகரங்களுக்கு இடையே பயணித்து நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு பலனளிக்கும்” என்று குறிப்பிட்டார். மேலும், இந்த ரயில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றால், நாடு முழுவதும் பல புதிய வந்தே மெட்ரோ ரயில்கள் திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் உங்களுக்காக...