இந்தியாவின் முதல் AI செல்ல பிராணிகளுக்கான ஸ்கேன்.. சென்னை இளைஞர்களின் ஸ்டார்ட் அப் பிசினஸ்..!

  சென்னையை சேர்ந்த 2 இளைஞர்கள் இந்தியாவில் முதல் முதலாக AI டெக்னாலஜியுடன் பெட் லவர் ஸ்டார்ட் அப் பிசினஸ் தொடங்கியுள்ளனர். டாக்டர் அஜ்மல் ஒரு பொதுவான நண்பர் மூலமாக ஜான் பால் என்பவரை…

pet

 

சென்னையை சேர்ந்த 2 இளைஞர்கள் இந்தியாவில் முதல் முதலாக AI டெக்னாலஜியுடன் பெட் லவர் ஸ்டார்ட் அப் பிசினஸ் தொடங்கியுள்ளனர்.

டாக்டர் அஜ்மல் ஒரு பொதுவான நண்பர் மூலமாக ஜான் பால் என்பவரை சந்தித்தபோது, அவர் விலங்குகளுடன் கொண்டிருந்த ஆழ்ந்த உறவை கண்டு ஆச்சரியமடைந்தார். தொடர்ந்து இருவரும் நட்புடன் பழகியபோது செல்லப்பிராணிகள் மீது கொண்ட ஆர்வத்தால், இருவரும் இணைந்து ஓர் ஸ்டார்ட்அப் தொடங்கினர். இது முழுக்க முழுக்க செல்ல பிராணிகளுக்கான உருவாக்கப்பட்டது.

நாங்களே ஒரு பேட் லவராக இருப்பதால், மிருகங்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு வணிகத்தை தொடங்குவது எங்களுக்கு மிகுந்த திருப்தியளித்தது என்றும், நாங்கள் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளின் வாழ்க்கையை எளிதாக்க அதிகமாய் உழைத்துள்ளோம்,” என்றும் ஒரு பேட்டியில் இவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் கடந்த 2018-ஆம் ஆண்டு, டாக்டர் அஜ்மல் மற்றும் ஜான் பால் இணைந்து  MimiBowBow என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்கினர். இதில் Mimi என்றால் பூனைகளையும்  BowBow என்பது நாய்களையும் குறிப்பதாகும்.

இது முழுக்க முழுக்க செல்லப்பிராணிகளின் உணவு மற்றும்  கேரிங் பொருட்கள் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பிளாட்பாரமாக தொடங்கப்பட்டது. தொடக்கத்திலேயே 10 மாதங்களில் ₹1.8 கோடி வருமானம் ஈட்டியது.

இந்த நிலையில் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றியது. அப்போது தான் செல்லப்பிராணிகளின் உணவில் உண்மையான இறைச்சி கூட இல்லை என்றபுதிய உண்மை தெரியவந்தது. ஜான் பால் பெட் உணவு நிறுவனங்களைப் பற்றி ஆராயும் போது, மிகப்பெரிய பிராண்டுகள் தரம் குறைந்த இறைச்சியை பயன்படுத்துவதை கண்டுபிடித்தார்.

அவற்றில் உண்மையான இறைச்சி இல்லை. விலங்குகளின் கழிவுகளை ஊறவைத்து, பொடியாக்கி, அரைப்பதை மட்டுமே செய்தார்கள். மேலும் அவர்கள் தங்களுக்கே ஒரு தனி செல்லப்பிராணிகளின் உணவுப் பிராண்டை உருவாக்க முடிவு செய்தனர்.

நாங்கள் தனியாக ஒரு உயர் தரமான, உண்மையான இறைச்சியைக் கொண்ட, கோழி இறைச்சியை மட்டுமே அடங்கிய உணவை உருவாக்கினோம். இது 24-36 மாதங்கள் நீடிக்கும், அதே நேரத்தில் நாய்கள் மற்றும் பூனைகள் இயல்பாக கடிக்க வசதியாக இருக்கும். மேலும் ஆய்வுகளின் மூலம் செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, AI-ஆதரவு பெற்ற புதிய சிகிச்சை முறையையும் MimiBowBow அறிமுகப்படுத்தியது.

Pet Scan Pro என்ற AI-ஆதரவு பெற்ற முதல் பேட் ஹெல்த் ஸ்கேன் தொடங்கப்பட்டது. பல செல்லப்பிராணிகளின் ஓனர்களுக்கு  ஒரு பெரிய பிரச்சினை என்னவெனில் சரியான நேரத்தில் Veterinary Doctor-ஐ அணுக முடியாமல் போகிறது. மேலும் செல்லப்பிராணிகளின் உடலில் சிறிய அறிகுறிகள் பெரிதாக மாறும் முன்பு கண்டுபிடிக்க முடியவில்லை. இதை மாற்ற வேண்டும் என்று MimiBowBow-வில் முடிவு செய்தார்கள் இதன் விளைவாக, Pet Scan Pro உருவாக்கப்பட்டது.

Smartphone கேமரா மூலம் செல்லப்பிராணியின் தோல், பற்கள், கண்கள், எலும்புகள், மூட்டுகளை ஸ்கேன் செய்யது ஒரு நிமிடத்திற்குள், AI-யின் 95% துல்லியத்துடன் கூடிய அறிக்கையை உருவாக்கும். அறிக்கை தயாரானதும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் நேரடியாக வெட்னரி டாக்டர்களை சந்திக்கலாம். இதனால் டாக்டர்களை சந்திக்கும்போது, செல்லப்பிராணிகளின் ஓனர்கள் வெறும் ‘சிம்டம்’ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் AI மூலம் நிரூபிக்கப்பட்ட அறிக்கையுடன் டாக்டரை அணுகலாம்.