லம்போகினி காரை நிறுத்தி பரிசோதித்த போலீசார்.. கொஞ்ச நேரத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ

By Ajith V

Published:

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் ஒருவிதமான விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். உதாரணத்திற்கு வார இறுதி என வரும் போது திரை அரங்கிலோ அல்லது வீட்டிலோ இருந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டுமென விரும்புவார்கள். இன்னொரு பக்கம் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும், எங்காவது சுற்றுலாவுக்கு செல்வதும் என இருப்பவர்களும் உள்ளனர்.

அந்த வகையில் கார் அல்லது பைக் என ஆட்டோமொபைல் பொருட்கள் மீது அலாதி பிரியம் உள்ளவர்களும் இங்கே ஏராளமான பேர் உள்ளனர். ஒரு சிலர் பெற்றோர்கள் பணத்தில் தங்களுக்கு பிடித்த கார் அல்லது பைக்கை வாங்கிக் கொள்வார்கள். இன்னொரு பக்கம் கடினமாக உழைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கார் அல்லது பைக்கை வாங்குவார்கள்.

இப்படி காரணங்கள் எதுவாக இருந்தா லும் பிடித்த காரையோ, பைக்கையோ வாங்கி கொஞ்ச தூரம் பயணம் செய்யும் போது அதில் கிடைக்கும் உற்சாகத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் லம்போகினி காரை போலீசார் பரிசோதனை செய்த சூழலில் அதன் பின்னர் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

போக்குவரத்து சாலை விதிகளை சரியாக கடைபிடித்த படி நாம் எந்த நாடாக இருந்தாலும் வாகனங்களை இயக்க வேண்டும். அந்த வகையில், உலக புகழ்பெற்ற லம்போகினி காரை இந்தியாவில் நிஷாந்த் சபூ (Nishant Saboo) என்ற நபர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அதனை நிறுத்திய போக்குவரத்து போலீசார், காரில் அனைத்து விஷயங்களும் சரியாக இருப்பதை பரிசோதித்து பார்த்துள்ளனர்.

மேலும் நிஷாந்த் என்ற அந்த வாலிபர் அனைத்தையும் சரியாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அத்துடன் போலீசார் நிறுத்தி கொள்ளாமல் லம்போகினி காரில் இருந்தபடி ஒரு போட்டோவை எடுத்து கொள்ளட்டுமா என்றும் கேட்டுள்ளனர். தொடர்ந்து அதில் போலீஸ் அதிகாரி ஒருவர் சிரித்தபடி காருக்குள் ஏறி அமர, சூப்பர் காரை பார்த்ததும் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி அவர் முகம் முழுக்க நிறைந்திருந்தது. உடனிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் போனை கொடுத்து தன்னை ஒரு புகைப்படத்தையும் அவர் எடுத்துக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிஷாந்த், அங்கு நடந்த சம்பவத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தார். போலீசாருக்கு கூட சூப்பர் கார்கள் மீது பிரியம் இருப்பதாகவும் தனது லம்போகினி கார் மூலம் இது போல நிறைய தருணங்களையும் உருவாக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 3 மில்லியன் பார்வையர்களை கடந்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், லம்போகினி காரில் அமர்ந்த போலீசாரின் உற்சாகம் உள்ளிட்ட விஷயங்கள் அதிக கவனம் பெற்று வருகிறது.