இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.. நீங்க ரஷ்யாவிடம் வாங்கலாம்.. நாங்க மட்டும் வாங்க கூடாதா? அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி.!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளன. டிரம்ப் நிர்வாகம் அதிர்ச்சி அடையும்…

putin modi trump

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளன. டிரம்ப் நிர்வாகம் அதிர்ச்சி அடையும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு துறையும் ஒரே நேரத்தில் அமெரிக்காவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கேள்வி.. “நீங்கள் வாங்கலாம், நாங்கள் கூடாதா?”:

டிரம்ப், “எங்கள் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால், இந்தியா மீது 25% வரி விதிப்போம்” என்று மிரட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “ரஷ்யாவிடமிருந்து நாங்கள் கச்சா எண்ணெய் வாங்குவதைவிட, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் யுரேனியத்தை அதிகம் இறக்குமதி செய்கின்றன. நீங்கள் மட்டும் ரஷ்யாவிடம் வாங்கலாம், நாங்கள் மட்டும் வாங்கக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தேவைக்கான வர்த்தகம்:

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது என்பது எங்கள் நாட்டின் தேவைக்காகவே தவிர, அது ரஷ்யாவுக்கான அரசியல் ஆதரவு அல்ல என்றும் இந்தியா தெளிவுபடுத்தியது.

புள்ளிவிவரங்கள்:

“ஐரோப்பிய யூனியன், ரஷ்யாவுடன் $67.5 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் $17.2 பில்லியன் மதிப்புள்ள சேவைகளை வர்த்தகம் செய்கிறது. இது, இந்தியா வாங்கும் எண்ணெய்யைவிட பல மடங்கு அதிகம். அமெரிக்காவும் தனது அணுசக்தி துறைக்கு யுரேனியம் மற்றும் மின்சார வாகனத் துறைக்கு பல்லேடியம் போன்றவற்றை ரஷ்யாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்கிறது” என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

உரிமைக்கான வாதம்:

“அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால், எங்கள் நாட்டு மக்களுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது தவறா?” என்று இந்தியா எழுப்பிய கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் கண்டனம்

இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சர்வதேச அரங்கில் தங்கள் ஆதிக்கம் குறைவதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் ‘வரி விதிப்பேன்’ என்று மிரட்டி சாதிக்க முடியாது. பொருளாதார தடைகள் வரலாற்றின் இயற்கையான போக்கைத் தடுக்க முடியாது” என்று டிரம்ப் நிர்வாகத்தை கண்டித்துள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறுதியான நிலைப்பாடு, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.