இன்னும் 2 வருடங்களில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் AI வேலைவாய்ப்புகள்.. ஆச்சரிய தகவல்..!

By Bala Siva

Published:

AI தொழில்நுட்பம் குறித்த வேலை வாய்ப்புகள் இந்தியா உள்பட உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்த படிப்புகளை படிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் தற்போது AI சம்பந்தப்பட்ட படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில வருடங்களில் AI படிப்பில் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இன்னும் இரண்டு வருடங்களில் இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட AI சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை AI சம்பந்தப்பட்ட வேலைகள் கிடைக்கும் என்றும் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து AI சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளரும் என்றும் இந்தியாவில் தற்போது நான்கு லட்சம் AI பொறியாளர்கள் உள்ள நிலையில் உண்மையான தேவை ஆறு லட்சமாக உள்ளது என்றும் AI பொறியாளர்கள் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை புதிய AI வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் சுகாதாரம், மின் வர்த்தகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் AI வேலை வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

Tags: AI, india, job