தாமதமாக வரி தாக்கல் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள்.. எவ்வளவு இழப்புகள்..!

By Bala Siva

Published:

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது அபராதத்துடன் ஒரு சிலர் வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர். வருமான வரியை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தாமல் காலதாமதம் செய்வதால் ஏற்படும் இழப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஜூலை 31 ஆம் தேதியுடன் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிந்துவிட்டாலும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அபராதத்துடன் வரி தாக்கல் செய்து கொள்ளலாம். இருப்பினும் இதன் மூலம் சில இழப்புகள் ஏற்படும்.

அதாவது முதலீடு மூலம் குறுகிய கால மூலதன இழப்பு, நீண்ட கால மூலதன இழப்பு இருந்தால் அதை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் பழைய வரி முறையை தேர்வு செய்ய முடியாது. புதிய வரி முறையில் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் வருமானம் 5 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு 1000 ரூபாய் அபராதமும் 5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரீபண்ட் தொகை வர வேண்டியது இருந்தால் அதில் அபராத தொகையை கழித்துக் கொண்டு தான் மீதி தொகை ரீபண்ட் ஆக கிடைக்கும்.

ஆனால் அதே நேரத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் உடனடியாக அபராதத்துடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.