திருடர்களை என்னதான் கட்டுப்படுத்தினாலும் புதிது புதிதாக எப்படியாவது ஏதேனும் ஓர் வகையில் தங்களது கைவரிசையைக் காட்டி பின்னாளில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகின்றனர். காவல் துறையும் இவர்களை ஒடுக்க இரும்புக் கரம் கொண்டு செயல்பட்டாலும் வெளியில் வந்து மீண்டும் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றனர். சாதாரணமாக திருடர்கள் வீடு புகுந்து திருடுவது, ஆன்லைன் மோசடி, நள்ளிரவில் திருடுவது, பிக்பாக்கெட் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் இங்கே ஒரு திருடன் குடும்பங்களில் ஒன்றாகப் பழகி அவர்களுடன் பாசமாக இருப்பது போல் நடித்து அவர்களிடம் கைவரிசை காண்பித்திருக்கிறான். இச்சம்பவம் நடைபெற்றது உத்தரப்பிரதேசத்தில். அம்மாநிலத்தைச் சேர்ந்த ராஜு(30) என்ற இளைஞன் கைவரிசை காட்டுவது குடும்பங்களில். எப்படி எனில் பாட்டாளி படத்தில் வடிவேலு பெட்டியைத் திருடுவதற்காக பெண்வேஷம் போட்டு தங்கச்சியாக நடிப்பாரே அதேபோல் தான்.
இந்த ஒரு வேலைக்குத்தான் மிஷின் இல்லாம இருந்துச்சு.. இப்போ இதற்கும் கண்டுபிடிச்சிட்டாங்க..
ராஜு என்ற அந்தத் திருடன் குடும்பங்களில் சென்று நான்தான் சிறுவயதில் உங்கள் காணாமல் போன தம்பி,மகன், உறவினர் என்று குடும்பங்களில் அறிமுகமாகி அவர்களிடம் பாசமாகப் பழகி அங்கு குடும்பங்களிடம் திருட ஆரம்பித்திருக்கிறான். சில நாட்கள் சென்ற பிறகு அக்குடும்பத்தினை விட்டுப் பிரிந்து மற்றொரு குடும்பத்தில் இணைந்து அதே வசனம் பேசி அங்கும் சில நாட்கள் இருந்து திருடுவான்.
இப்படியே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது கைவரிசையைக் காட்ட பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல, இதேபோல் ஒருவரின் குடும்பத்தில் இணைய அங்கு அவனது நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகம் அடைந்த குடும்பத்தார் அவனுக்கு மரபணு பரிசோதனை நடத்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது ராஜு உத்தரப்பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.