மரங்களுக்கு Birthday Party… திருச்சியில் நடந்த வினோத சம்பவம்…

By Meena

Published:

இன்றைய காலத்தில் வினோதமான சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. அதற்கு காரணம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு சமூக வலைத்தளத்தின் மீது இருக்கும் ஒரு மோகம் தான் என்று கூற வேண்டும். லைக்கள் பெற வேண்டும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் உண்டோ அது எல்லாமே செய்கிறார்கள். அவர்களின் அட்டூழியம் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

ஒரு சிலர் இந்த லைக்குகளுக்காகவும் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகவும் ஆபத்தை உணராமல் ஆபத்தான இடங்களுக்கு சென்று உயிரை விட்டவர்களின் செய்தியும் நாம் கேட்டிருப்போம். எதனால்தான் இந்த லைக்குகளை வைத்து என்ன செய்வார்கள் என்று தான் தெரிவதில்லை. அதை பார்த்து பார்த்து மக்களுக்கு பழகியும் போய்விட்டது என்று சொல்லலாம் வெறுப்பும் ஆகிவிட்டது என்றும் சொல்லலாம்.

கெட்ட விஷயங்கள் மக்களிடையே உடனே போய் சேரும். அதேபோல் இன்றைய காலகட்டத்தில் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் கூட எதையாவது ஒரு வினோதமான சம்பவம் செய்தால் தான் மக்கள் இடையே போய் சேருகிறது. நேரடியாக சொன்னால் அதற்கான ரீச் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதேபோல மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சியில் ஒரு வினோத சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஊராட்சி மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மரக்கன்றுகளை நட்டு என்று இருக்கின்றனர். அந்த மரக்கன்று வைத்த தினத்தை ஒவ்வொரு வருடமும் மரங்களுக்கு மாலை அணிவித்து பூ போட்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். இது கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் மக்களிடம் மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் நோக்கமாகவே இது செய்யப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் பொதுமக்களுக்கும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்கள். மரக்கன்றுகளை வளர்த்தால் தான் இந்த பூமியை காப்பாற்ற இயலும் அதனால் அனைவரும் முடிந்த அளவுக்கு மரம் வளருங்கள் என்ற விழிப்புணர்வு செய்தியை வழங்கினர். ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக கூட இந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டியதாகிவிட்டதே என்று நினைத்தால் சற்று வருத்தமாக தான் இருக்கிறது.