23 கோடிக்கு ஏலம் போன எருமை.. இருந்தும் உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

By John A

Published:

ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் விழாவினையொட்டி நடந்த ஏலத்தில் எருமை மாடு ஒன்று 23 கோடிவரை ஏலம் போயிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரை அடுத்துள்ள புஷ்கர் நகரில் வருகிற 21 முதல் 27 வரை புஷ்கர் விழாவானது கொண்டாடப்படுகிறது. இந்து தெய்வங்கள் தாமரை மலருடன் ஒரு அன்னத்தினை பூமியில் விழச் செய்ததால் இந்த இடம் புஷ்கர் என்று புராணங்களில் அழைக்கப்படுகிறது. இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கும் இத்தலத்தில் பிரம்மா கோயில், சாவித்திரி, வராஹி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன. இத்திருவிழாவின் போது ஒட்டக சபாரி, மலையேற்றம் போன்றவை வெகு பிரபலம்.

இந்நிலையில் புஷ்கர் திருவிழாவினையொட்டி அஜ்மீர் நகரில் கால்நடைகள் ஏலச்சந்தை ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் பங்கேற்ற எருமை மாடு ஒன்று சுமார் 23 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது. சுமார் 5 அடி உயரமும், 13 அடி நீளமும், ஒன்றரை டன் எடையும் கொண்ட இந்த எருமை மாட்டினை வாங்க பலரும் ஒவ்வொரு ஆண்டும் போட்டி போடுவது வழக்கமாம்.

உலகின் மிக வேகமான இன்டர்நெட்.. ஒரு நொடியில் 40,000 திரைப்படங்கள் டவுன்லோடு..!

தற்போது 8 வயதாகும் இந்த எருமை மாடு மிகுந்த ஆரோக்கியத்துடன் உள்ளது. அன்மோல் என்ற அந்த எருமை மாட்டின் உரிமையாளர் ஜக்தர் சிங் அதனை தன் மகன் போல் பாவித்து வளர்த்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஏலத்தில் பங்கு கொள்ளும் அவர் மாட்டினை விற்பது கிடையாதாம்.

மேலும் புஷ்கர் விழாவின் போது மக்கள் தங்கள் கால்நடைகளை அலங்கரித்து அதனை விற்பனைக்குக் கொண்டு செல்வது வழக்கம். மேலும் ராஜஸ்தானின் முக்கிய கலாச்சார பண்டிகையாக உணவு, பாரம்பரிய கைவினைக் கருவிகள் கண்காட்சி போன்றவையும் நடைபெறும். இங்குள்ள புஷ்கர் ஏரியில் மக்கள் புனித நீராடி இறைவனை வணங்குவது வழக்கம்.