மழை என்பது பொதுவாக இயற்கையாக பெறப்படுவது என்ற நிலையில் தற்போது செயற்கை மழையை பொழிய வைக்கும் முயற்சியில் கான்பூர் ஐஐடி முதல் கட்ட வெற்றியை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஒரு சில இடங்களில் மழை அதிகமாக பெய்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதும் ஒரு சில இடங்களில் மழை பெய்யாமல் வறட்சியாக உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தேவையான இடத்தில் தேவையான அளவு மழை பெய்ய வைக்கும் அளவுக்கு கான்பூர் ஐஐடி ஆராய்ச்சி ஒன்றை செய்தது. இதனை அடுத்து செயற்கையாக மேகங்களை குளிர்வித்து மழை பெய்ய வைக்கும் முயற்சியின் முதல் கட்ட வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிவடைந்தால் நினைத்த நேரத்தில் நினைத்து அளவுக்கு மழையை பெய்ய வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிளவுட் விதைப்பு என்பது மேக ஒடுக்கம் கருவாக செயல்படும் பொருட்களை வளிமண்டலத்தில் சிதறடிப்பதன் மூலம் செயற்கையாக மழையை பெய்ய வைக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேக விதைப்புக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருள் சில்வர் அயோடைடு ஆகும். இந்த ரசாயனம் மேகங்களில் உள்ள நீர்த்துளிகளை ஒன்றிணைத்து மழை பெய்ய வைக்கும்.
இந்த நிலையில் மேக விதைப்பு இணைப்புகள் பொருத்தப்பட்ட செஸ்னா விமானத்தைப் பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. விமானம் 5,000 அடி உயரத்திற்கு பறந்து சில்வர் அயோடைடை மேகத்தில் சிதறடித்தது. சோதனை வெற்றியடைந்து, மேக விதைப்பு லேசான மழை பெய்தது.
ஐஐடி கான்பூர் குழு இப்போது மேக விதைப்பு செயல்முறையை மேம்படுத்தும் பொருட்டு மேலும் சோதனை விமானங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. வறட்சியாக உள்ள பகுதிகளில் மழையை அதிகரிக்க மேக விதைப்பு பயன்படுத்தப்படலாம் என்று குழு நம்புகிறது.