“ஜனநாயகன்” படத்திற்கு தி.மு.க. தரப்பிலிருந்து பிரச்சனை வந்தால், விஜய் அ.தி.மு.க. பக்கம் போய்விடுவார் என்றும், ஒருவேளை பிரச்சனை வரவில்லை என்றால், இது நான்கு முனைப் போட்டியாக தொடரும் என்றும், TDS ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் அரசியல் நகர்வுகள்
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று விஜய் உறுதிபடக் கூறியதை அடுத்து, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. தி.மு.க. தனது அரசியல் எதிரி என்பதால், தி.மு.க. கூட்டணியிலும் அவர் செல்ல மாட்டார். மேலும், முதலமைச்சர் வேட்பாளர் நான் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, அவர் ஒரு தனி கூட்டணியை அமைக்க இருக்கிறார் என்றுதான் முடிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி என சீமான் அறிவித்துவிட்டதால், தமிழகத்தில் இன்றைய நிலையில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இது ஏற்பட்டால், கண்டிப்பாக தி.மு.க.வுக்குதான் சாதகம் என்று அரசியல் வியூக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
‘ஜனநாயகன்’ படத்தின் தாக்கம்
இந்த நிலையில், தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படம் வெளியாக உள்ளது. அந்த திரைப்படம் வெளியாவதற்கு தி.மு.க. தரப்பிலிருந்து பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கண்டிப்பாக விஜய், அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றுவிடுவார் என்றும் TDS ரவி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒருவேளை “ஜனநாயகன்” படத்திற்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராமல், அந்த படத்தை சுமூகமாக ரிலீஸ் செய்ய தி.மு.க. அனுமதித்து விட்டால், இப்போது இருக்கும் நான்கு முனை போட்டி தேர்தலிலும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டி.டி.எஸ். ரவியின் ஆலோசனை
“என்னை பொருத்தவரை விஜய், அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல வேண்டும் அல்லது சீமானை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது செய்தால் மட்டும்தான் விஜய் வெற்றி பெற முடியும், தமிழகத்தை மீட்க முடியும்” என்றும் TDS ரவி தெரிவித்துள்ளார். எனவே, TDS ரவி சொல்வதுபோல் “ஜனநாயகன்” படத்திற்கு பிரச்சனை வருமா, அப்படி வந்தால் விஜய், அ.தி.மு.க. பக்கம் செல்வாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
