எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதை பண்ண மாட்டோமா? விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? ஊடக வெளிச்சம் மட்டும் தான் விஜய்க்கு இருக்குது.. இடும்பாவனம் கார்த்திக்

  விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா? அவராலேயே அரசியலில் சாதிக்க முடியவில்லை, விஜய்யால் ஒன்றுமே செய்ய முடியாது என நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பிரமுகரான இடும்பாவனம் கார்த்திக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை…

idumbavanam.jopg

 

விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா? அவராலேயே அரசியலில் சாதிக்க முடியவில்லை, விஜய்யால் ஒன்றுமே செய்ய முடியாது என நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பிரமுகரான இடும்பாவனம் கார்த்திக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என விஜய் தெளிவாக சொல்லவில்லை. திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார். ஒருவேளை அதிமுக, பாஜக கூட்டணி பிளவுபட்டால், அதிமுகவுடன் அவர் கூட்டணி வைக்க மாட்டார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். மேலும், “விஜய்க்கு இப்போதே 20 சதவீதம் வாக்குகள் இருப்பதாக கூறப்படுவது ஊடகத்தினரின் வெளிச்சம்தான் என்றும், 100%, 500%, 1000% கூட இன்று கூறிக்கொள்ளுங்கள். ஆனால், அதையெல்லாம் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்” என்றும் இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்தார்.

“நகரத்தை விட்டுவிட்டு கிராமத்து பக்கம் சென்றால், ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற ஒரு கட்சி இருக்கிறதே யாருக்கும் தெரியவில்லை என்றும், விஜய்யைப் பொறுத்தவரை அவருக்குத் தெளிவான, ஆழமான அரசியல் புரிதல் இல்லை என்றும் இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்தார்.

“விஜய்க்கு ஊடக வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. கவனயீர்ப்பு இருக்கிறது. அது மட்டுமின்றி அவருக்கு திரையுலக கவர்ச்சியும் இருக்கிறது. அவர் வந்தால், அவரை பார்க்க மக்கள் கண்டிப்பாக கூடுவார்கள். ஆனால், அதெல்லாம் வாக்காக மாறுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ‘அதிமுக வாக்கை பிரித்து விடுவார், திமுக வாக்கை பிரித்து விடுவார், காங்கிரஸ் வாக்கை பிரித்து விடுவார்’ என்றெல்லாம் ஊடகங்கள் எப்படி முடிவுக்கு வருகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை” என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்.

“நடிகர்கள் யார் வந்தாலும் கூட்டம் கூடும். அஜித் வந்தாலும், சூர்யா வந்தாலும், கூட்டம் கூடும். ஆனால், அந்த கூட்டம் எல்லாம் வாக்காக மாறும் என்பது அர்த்தம் இல்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“விஜய்க்கு இத்தனை சதவீதம் வாக்கு இருக்கிறது, அத்தனை சதவீதம் வாக்கு இருக்கிறது என்று ஊடகங்கள்தான் தேவையில்லாமல் சொல்லி வருகின்றனர் என்றும், எதுவுமே இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும், எம்ஜிஆரே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் “கருத்துக்கணிப்புகள் எல்லாமே ‘என் கருத்துத் திணிப்புத்தான்’ என்றும், காசு வாங்கிக்கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடுபவர்கள் மக்கள் மனதை மாற்ற நினைக்கிறார்கள் என்றும், மக்களுக்கு எப்போதுமே ‘ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவோம்’ என்று ஒரு மனப்பான்மை இருக்கும். அதனால் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்துவதற்காக ‘இந்த கட்சிதான் ஜெயிக்கும்’ என அனைத்து கருத்துக்களையும் கூறுவதை பார்த்து மக்களும் மனமாறுவார்கள் என்றும், எனவே கருத்துக்கணிப்பு எதையுமே நாங்கள் நம்ப மாட்டோம்” என்றும் இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்தார்.

Vijay is No Bigger Than Vijayakanth; It’s All Media Glare!” – Idumbavanam Karthik