தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பின்படி
- போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது.
- போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- புவியியல் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக நிர்மல்ராஜ் பதவி அமர்த்தப்படுகிறார்.
- சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை ஆணையராக ஜெயகாந்தன் அவர்களும்,
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக ரத்னாவும் நியமிக்கப்படுகிறார்.
- மதுரை மாநகராட்சி ஆணையராக கேஜே. பிரவீன் குமார் அவர்களும்,
- சென்னை மாநகராட்சி குடிநீர் வளங்கள் மற்றும் நீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனராக சிம்ரன்ஜித் சிங்கும்,
- சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ் பாலச்சந்திரும் நியமிக்கப்படுகிறார்கள்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
