வீட்டு வேலைகளை செய்யும் மனித ரோபோட்.. எலான் மஸ்க் நிறுவனம் சாதனை..!

By Bala Siva

Published:

 

வீட்டு வேலை செய்ய ஆட்களை வேலைக்கு அமர்த்துவது என்பது பல வீடுகளில் வழக்கமாக நடந்து வரும் நிலையில், இதனை கணக்கில் கொண்டு எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் வீட்டு வேலை செய்வதற்கான மனித ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோட் பல வேலைக்காரர்கள் செய்யும் வேலையை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரோபோக்களால் அனைத்து பணிகளையும் செய்ய முடியும் என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மனித ரோபோக்கள் நாம் செய்ய விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்யும் என்றும், இவற்றால் பேச முடியும், நடனம் ஆட முடியும், குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்ள முடியும், குழந்தைகளுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுத்து அவர்களுடன் விளையாட முடியும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும், நாய்களை நடைப்பயிற்சி அழைத்து செல்ல,  அனைத்து வகையான தோட்ட வேலைகளை செய்ய, வீட்டை சுத்தம் செய்ய, கடைக்கு சென்று பலசரக்கு உள்ளிட்ட அனைத்து சாமான்களையும் வாங்கி வர, இந்த ரோபோவால் முடியும் என்றும், மனிதர்களுக்கு மிகச்சிறந்த நண்பனாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றின் விலை 20 ஆயிரம் அமெரிக்க டாலர் முதல் 30 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை என்று கூறப்பட்டாலும், சில மாதங்களில் இதன் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags: elon musk, robo, tesla