இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?

சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? என்ன காரணம் என்பதை அறியலாம்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரிய நகரங்களில் ஹெல்மெட் போட்டிருந்தாலும், எல்லா ஆவணங்களும் வண்டியில் சரியாக இருந்தாலும் வாகன சோதனையில் இருசக்கர வாகனங்களை போலீசார் பிடிப்பார்கள்.. ஏன் இப்படி பிடிக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

இதேபோல் காரில் சீட் பெல்ட் போட்டு ஒழுங்காகவே சிலர் பயணிப்பார்கள். காரில் உள்ள ஆவணங்கள் எல்லாமே சரியாகவே இருக்கும். ஆனால் காரையும் போலீசார் சோதனை என் பெயரில் சரியாக பிடிப்பார்கள். அப்படி போலீசார் பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வீடியோ வெளியிட்டுள்ளனர்

அந்த வீடியோவில் போலீசார் கூறும் போது, “கார், பைக்கில் போகும் போது எல்லா டாக்குமெண்டும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை ஏன் பிடிக்கிறாறர்கள். அப்படி என்றால் நீங்கள் இதை பண்ணாம விட்டிருப்பீங்க.. என்னென்று யோசிக்கிறீங்களா.. அதுதான்ங்க உங்கள் நம்பர் பிளேட்.. அரசின் ரூல்ஸ்படி உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட் வளையாமலும், துருப்பிடிக்காமலும் இருக்க வேண்டும். உங்கள் நம்பர் பிளேட்டில் உள்ள எழுத்துக்கள் எல்லாமே ஒரே அளவோடு சீராக இருக்க வேண்டும்..

உங்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் உடைந்தோ, அல்லது நம்பர் பிளேட் இல்லாமலோ இருக்கக்கூடாது… இந்த விதிமுறைகளை பின்பற்றினால் உங்கள் பயணம் இனிதே அமையும் ” என்று கூறியுள்ளனர்.

அதேநேரம் முக்கியமான இன்னொரு விஷயம்.. இது சென்னைக்கு மட்டும் கண்டிப்பாக பொருந்தும்.. சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். உங்கள் பின்னால் உட்கார்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியவில்லை என்றால், நீங்கள் 500 அபராதம் செலுத்த வேண்டியது வரும். அதேபோல் விடுமுறை நாட்களில், குறிப்பாக ஞாயிறுகளில் திநகர், வேளச்சேரி, புரசைவாக்கம், குரோம்பேட்டை போன்ற பகுதகிளில் நோ ப பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் திரும்ப வரும் போது, 750 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது வரும்.