ஹானர் 90 லைட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள Honor 90 Lite ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 6020 SoC பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 8GB RAM மற்றும் 256GB இண்டர்னல் ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட இந்த போன், 6.7-இன்ச் முழு-HD+ (2,388 x 1080 பிக்சல்கள்) LTPS LCD டிஸ்ப்ளே கொண்டது.
புகைப்படம் எடுப்பதற்காக, Honor 90 Lite ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகிய மூன்று கேமிராக்களும், முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமிராவும் உள்ளது.
Honor 90 Lite போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டதூ. MagicOS 7.1 உடன் இயங்கும் இந்த போன் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி உள்ளது. மேலும் கைரேகை சென்சார், USB டைப்-சி போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Honor 90 Lite விரைவில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஹானர் 90 லைட்டின் சில முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே:
* 6.7-இன்ச் முழு-எச்டி+ (2,388 x 1080 பிக்சல்கள்) LTPS LCD டிஸ்ப்ளே
* MediaTek Dimensity 6020 SoC பிராஸசர்
* 8 ஜிபி ரேம்
* 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 108-மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் பின்புற கேமிரா
* 16 மெகாபிக்சல் சென்சார் செல்பி கேமிரா
* MagicOS 7.1 உடன் Android 13 ஓஎஸ்
* 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி