அலற வைக்கும் சீனா…! மீண்டும் ஒரு பெருந்தொற்று அறிகுறியா..? மருத்துவமனையில் குவியும் கூட்டம்

கடந்த 2019-ம் ஆண்டை உலக நாடுகள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. உலகையே புரட்டிப்போட்ட கோவிட் பெருந்தொற்றிலிருந்து மீண்டு 5 ஆண்டுகள் ஆகப் போகின்றன. சீனாவின் யுவான் நகரில் இருந்து பரவிய கொரோனோ வைரஸ்…

HMPV China

கடந்த 2019-ம் ஆண்டை உலக நாடுகள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. உலகையே புரட்டிப்போட்ட கோவிட் பெருந்தொற்றிலிருந்து மீண்டு 5 ஆண்டுகள் ஆகப் போகின்றன. சீனாவின் யுவான் நகரில் இருந்து பரவிய கொரோனோ வைரஸ் படிப்படியாக ஒரு சில மாதங்களில் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைத்தன.

உலகெங்கிலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உலக பொருளாதாரமே மொத்தமாக முடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. பெருந்தொற்றிலிருந்து பொருளாதார ரீதியாக நாடுகளும் மீண்டு சராசரி பொருளாதாரத்தினை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பேரிடியாக தற்போது சீனாவில் புதிய வகை வைரஸ் மீண்டும் பரவுவதால் உலக நாடுகள் உஷாராகி உள்ளன. சீனாவில் தற்போது human metapneumovirus (ஹெச்.எம்.பி.வி) எனப்படும் புதியவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் சீன மக்கள் மருத்துவமனைக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

உஷார் மக்களே..! தமிழகத்தினைத் தாக்கும் புதிய நோய்..யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?

மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் வைரஸானது கொரோனா அறிகுறிகளை ஒத்திருப்பதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மருத்துவமனைகளில் மக்கள் கூட்டமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே கொரோனா போன்ற சில வைரஸ்கள் மீண்டும் அங்கே பரவி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சீனா சுகாதாரத்துறை இவ்வைரஸ்களை கட்டுப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் நிமோனியா காய்ச்சலும் அதிகம் உள்ளதால் பல அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைக்குப் படையெடுப்பதாக சீனாவின் SARS-CoV-2 (Covid-19) என்ற எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பருவ நிலை மாற்றத்தினால் தமிழகத்தில் ஸ்கிரப் டைபஸ் என்ற பாக்டீரியாத் தொற்று பரவி வரும் வேளையில் தற்போது சீனாவில் பரவி வரும் HMPV தொற்றால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.