இந்தியை போலவே ஜியோவுக்கும் தென்னிந்தியாவில் ஆதரவில்லையா?

  தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்து எதிர்ப்பு உள்ளது என்பதும், குறிப்பாக தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன என்பதும் தெரிந்ததே.…

jio

 

தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்து எதிர்ப்பு உள்ளது என்பதும், குறிப்பாக தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

மேலும், தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் அனைத்து CBSE பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இது, தாய் மொழியின் முக்கியத்துவத்தை அனைத்து மாநிலங்களும் தற்போது புரிந்து கொண்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது.

இந்த நிலையில், இந்தியை   போலவே ஜியோ நிறுவனத்தையும் தென்னிந்திய பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் ஏர்டெல் சந்தாதாரர்களை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது, இது மிகப்பெரிய ஆச்சரியமாகும். அதேபோல்,  மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களிலும் ஏர்டெல் நிறுவனத்திற்கு அதிக பயனாளர்கள் உள்ளனர்.

ஆனால், மத்திய இந்தியா பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஜியோ நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் ஜியோ பயனாளிகள் உள்ளனர்.

தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில், இந்தியை   போலவே ஜியோவுக்கும் பெரிய அளவு ஆதரவு இல்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.