இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்பை பற்றி அதிகம் புரிந்து இருக்கிறார்கள். சேமிப்பு மற்றும் முதலீடு என்பது மிகவும் முக்கியம் என்று தெரிந்து கொண்டு மக்கள் பல இடங்களில் தங்களது பணத்தை சேமிக்கும் முயற்சியை எடுக்கிறார்கள். அது தபால் அலுவலக திட்டம் வங்கி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் SIP போன்றவை ஆக இருக்கலாம். மக்களுக்கு உதவும் வகையிலும் தபால் அலுவலகங்களில் சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. தபால் அலுவலகத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது பணத்துக்கு உத்திரவாதமும் நல்லவித வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை பற்றி இனி காண்போம்.
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்பு திட்டத்தில் நீங்கள் மாதம் ரூபாய் 5000 சேமிக்கும் போது உங்களுக்கு வருவாய் 8 லட்சம் கிடைக்கும். இந்த ரெக்கரிங் டெபாசிட் கால அளவு ஐந்து ஆண்டுகள் ஆகும். மேலும் இந்த திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மாதம் 5000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அப்பொழுது ஐந்து ஆண்டுகளில் உங்களது முதலீடு ரூபாய் 3 லட்சம் ஆக இருக்கும். இதற்கு வட்டி ரூபாய் 56,730 ரூபாய் கிடைக்கும். அப்போது மொத்தமாக உங்கள் சேமிப்பு ரூபாய் 3,56, 850 ஆக இருக்கும்.
அத்துடன் உங்களது முதலீட்டை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த 3,56,850 ரூபாயை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். ஆக கடைசி பத்து ஆண்டுகள் கழித்து உங்களது முதலீடு ஆறு லட்சமாகவும் வட்டி ரூ 2,54,772 ஆகவும் இருக்கும். மொத்தத்தில் 10 ஆண்டுகளின் முடிவில் உங்களது கையில் ரூ 8,54, 772 இருக்கும். இந்த திட்டத்தில் ரூபாய் நூறிலிருந்து உங்கள் முதலீட்டை நீங்கள் தொடங்கலாம். ஒரு வருடத்திற்கு பிறகு இதில் கடன் பெறும் வசதியும் இருக்கிறது.