இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் கெட்டுப் போயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் எல்லாருமே கைக்குள் அடக்கமாக இருக்கும் போன் தான். தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது என்றாலும் அதற்கு தகுந்தாரப்போல் கெட்டவைகளும் வளர்ந்து இருக்கிறது.
அறியாத வயதில் இருக்கும் குழந்தைகள் எது நல்லது எது கெட்டது என்று தெரியாமல் மொபைல் போனுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். மொபைல் போனில் வருவது எல்லாமே சரிதான் அது தவறு கிடையாது என அறியாமல் பலதரப்பட்ட விஷயங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். போதை பொருட்கள் கூடாத நட்பு போன்ற பல விஷயங்களில் மாட்டி வாழ்க்கை தொலைகின்றனர்.
அதனால் இன்றைய இளம் தலைமுறை குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று சொல்லிக் கொடுக்கும் கடமை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் எது செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்து கொண்டே இருக்க வேண்டும். இனி அந்த மாதிரி பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக தான் புதிய முறையை ஒன்று உருவாக்கி இருக்கிறார்கள்.
அது என்னவென்றால் ஆஸ்திரேலியா அரசு 16 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது என்ற சட்டத்தை உருவாக்கி இருக்கிறது என்பதுதான். பெற்றோர்கள் கண்காணிப்பில் இருந்தாலும் கூட 16 வயதின் கீழ் இருக்கும் குழந்தைகள் facebook ட்விட்டர் இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற எந்த சமூக வலைத்தளங்களும் அவர்களால் பயன்படுத்த முடியாதபடி புதிய சட்டத்தை இயக்கி வருகிறது. இது போன்று மற்ற நாடுகளிலும் ஏற்படுத்தலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது.