சிகரெட் பிடித்தால் தொண்டையில் முடி வளருமா? அரிய வகை நோய் குறித்து அதிர்ச்சி தகவல்..!

பொதுவாக சிகரெட் பிடித்தால் நுரையீரல் பாதிக்கப்படும் என்றும் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது என்றுதான் கூறப்படுவதுண்டு. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தொடர்ச்சியாக புகைபிடித்ததால் தொண்டையில் முடி வளர்ந்ததாக கூறப்பட்டுள்ளதை அடுத்து அந்த அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு திடீரென இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தொண்டை வீக்கம் அடைந்து இருப்பதை பார்த்து ஸ்கேன் செய்து பார்த்தபோது தொண்டையில் சில முடிகள் வளர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது தான் சிறுவயதில் இருக்கும்போது தனது தொண்டையில் சர்ஜரி செய்ததாக கூறியுள்ளார். அந்த சர்ஜரி செய்யும்போது அவரது காதில் உள்ள தோலை எடுத்து பயன்படுத்திதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் தான் தற்போது முடி வளர்ந்து இருக்கிறது என்றும் குறிப்பாக சிகரெட் அதிகமாக புகைத்து வந்ததால் தான் அந்த இடத்தில் முடி வளர்ந்து இருக்கிறது என்றும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து முதலில் அந்த முடிகளை பிடுங்கிய நிலையில் அது நிரந்தர நிவாரணம் தராமல் மீண்டும் அதே இடத்தில் முடி வளர தொடங்கியுள்ளது. இதனை அடுத்து தொண்டையில் முடி வளரும் வேரை எரிக்கும் சிகிச்சை செய்து அவருக்கு நிரந்தர தீர்வு அளித்துள்ளனர்.

28 மில்லியன் மக்களில் ஒருவருக்கு தான் இந்த மாதிரி பிரச்சினை வரும் என்றும்  இருந்தாலும் புகைப்பழக்கம் அந்த நபருக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்றும் இதனை அடுத்து அவருக்கு அறிவுறுத்தியதை அடுத்து அவர் தற்போது புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்