வழுக்கை தலையில் முடி வளர்க்கும் மாயாஜாலம்.. கேம்பில் ஏற்பட்ட விபரீதம்..!

  வழுக்கை தலையில் முடி வளர்த்துக் கொடுப்போம் என உறுதிமொழி கூறி பஞ்சாபில் ஒரு கேம்ப் நடத்தப்பட்ட நிலையில், அந்த கேம்பில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் உள்ள…

hair

 

வழுக்கை தலையில் முடி வளர்த்துக் கொடுப்போம் என உறுதிமொழி கூறி பஞ்சாபில் ஒரு கேம்ப் நடத்தப்பட்ட நிலையில், அந்த கேம்பில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் உள்ள சங்ரூர் என்ற பகுதியில், வழுக்கை தலையிலும் மொட்டைத் தலையிலும் முடியை வளர்த்துக் காட்டுவோம் என்று தங்களுடைய தயாரிப்பை விளம்பரப்படுத்துவதற்காக “மாயாஜால முடி வளர்ப்பு” கேம்ப் நடத்தப்பட்டது. இந்த கேம்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் கொடுத்த தயாரிப்பை பயன்படுத்திய சில நிமிடங்களில் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 65 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

“எங்களுடைய தயாரிப்பை பயன்படுத்தினால் சில நாட்களில் முடி வளர்ந்து அடர்த்தியாகிவிடும்” என்று கூறிய விளம்பரத்தை நம்பி, தற்போது நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிவான விளம்பரத்தைக் கண்டு ஏராளமானோர் இந்த கேம்பில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நிறுவனத்தின் தயாரிப்பை தடவிய பத்து நிமிடங்களில் எதிர்வினை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், காவல்துறை மற்றும் மருத்துவத் துறையினரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முடி வளர்வதும் உதிர்வதும் இயற்கையான ஒன்று என்பதை புரிந்து கொண்டு, இப்படியான போலியான விளம்பரங்களை நம்பி உடல்நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.