இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட மாநிலமாக குஜராத் திகழ்கிறது. ஏனெனில் அங்கு பால் பண்ணைகள் அதிகம். மேலும் அதிக அளவில் கறவை மாடுகள் இருப்பதால் இந்தியாவின் வெண்மை புரட்சியில் குஜராத் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாதாரணமாக கறவை மாடு வைத்திருப்பவர்கள் பால் மற்றும் சாணத்தினை விற்று அதன் மூலம் லாபம் ஈட்டுவார்கள். ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு இளைஞர் மாடுகள் வைத்திருப்பவர்களிடம் அவற்றின் கோமியத்தினை வாங்கி அதனை மதிப்புக் கூட்டி மீண்டும் விவசாயகளுக்கே நுண்ணுயிர் தெளிப்பானாக விற்பனை செய்கிறார்.
இத்தனை காலமாக பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதன் முதலாக கோமியத்திற்கு அங்கீகாரம் கொடுத்து அதனையும் சிறந்த தொழிலாக மாற்றியிருக்கிறார் இந்த குஜராத் இளைஞர். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அஃபடா கிராமத்தினைச் சேர்ந்த மதன்ராஜ் புரோஹித் என்ற இளைஞர் பசு கோமியம் வங்கி ஒன்றை நடத்தி வருகிறார்.
மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. பண வரவு யாருக்கு தேடி வரும்?
பாலில் இருந்து எப்படி பால் பொருட்கள் பிரிக்கப்படுகிறதோ அதேபோல் பசுவின் கோமியத்தினை ஆலையில் பதப்படுத்தி பின் தரம் பிரிக்கப்பட்டு அதில் அம்மோனியம், பொட்டாசியம் போன்ற நுண்ணுயிர் சத்துக்கள் சேர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு நுண்ணுயிர் தெளிப்பானாக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக பனஸ்கந்தா மாவட்டத்தைச் சுற்றியுள்ள பசு வளர்ப்பாளர்களிடமிருந்து கோமியம் லிட்டருக்கு ரூ. 5 என்ற வகையில் வாங்கி அதனை மதிப்புக் கூட்டுகின்றனர். இதன் மூலம் மாடு வளர்ப்பாளர்கள் கோமியத்தினை விற்றே தினமும் 150 வரை சம்பாதிப்பதாகக் கூறுகின்றனர்.
பொதுவாகவே பசுவின் கோமியம் இந்து மத தர்மத்தில் புனிதமாகக் கருதப்படுகிறது. முதலில் சிறிய அளவில் தினமும் 100 லிட்டர் கோமியம் வாங்கி பதப்படுத்தி மதிப்புக் கூட்டி விற்பனை செய்தவர்கள் இன்று தினமும் 1000 லிட்டர் கோமியம் வரை சேகரித்து கோமியம் வங்கியாக நடத்தி வருகின்றனர். இதில் நல்ல லாபமும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த நுண்ணுயிர் எதிர்ப்பான் பெரும்பாலும் காய்கறிகள் பயிரிடுதல் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
மேலும் அறிவியல் ரீதியாகப் பார்த்தோம் என்றால் பசுவின் கோமியம் தாவரங்களுக்கு சிறந்த பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. வீடுகளிலும் யாகம் வளர்க்கும் போது பசுவின் கோமியத்தினை தெளிப்பது வழக்கம். இதுபோல் வித்தியாசமான புதுவிதமான தொழிலில் ஈடுபட்டு மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக சிறந்த தொழில்முனைவோராகத் திகழ்கிறார் மதன்ராஜ்.