நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்.. ஆனால் பிளஸ் 2 தேர்வில் பெயில்.. குஜராத் மாணவியின் சோகம்..!

By Bala Siva

Published:

நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி பிளஸ் டூ தேர்வில் பெயில் ஆகியுள்ளதை அடுத்து மருத்துவ படிப்பிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் படிப்பதற்கு பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும் நிலையில் குஜராத் மாநில மாணவி ஒருவர் நீட் தேர்வில் மிக அபாரமாக 705 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் பிளஸ் டூ தேர்வில் பெயில் ஆகி உள்ளதை அடுத்து அவரால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வில் குஜராத் மாணவி இயற்பியல் வேதியியல் ஆகிய இரு படங்களில் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணைத் தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் 21 மற்றும் 33 மதிப்பெண்கள் பெற்று மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வில் மட்டும் 705  மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ் டூ தேர்வில் பெயிலாகி உள்ள ஒரு மாணவி எப்படி நீட் தேர்வில் மட்டும் முதல் மாணவியாக வர முடியும்? நீட் தேர்வில் முறைகேடு தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு குறித்து பல சந்தேகங்களை எழுப்பப்பட்டு வரும் நிலையில் பிளஸ் டூ தேர்வில் பெயிலான ஒரு மாணவியால் எப்படி நீட் தேர்வில் மட்டும் வெற்றி பெற முடியும் என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலர் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு வருடம் முழுவதும் பள்ளியில் படித்த பாடங்களில் தேர்வு தேர்ச்சி பெறாத ஒரு மாணவி ஒரு சில மாதங்கள் மட்டும் கோச்சிங் கிளாஸ் சென்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றால் அது சந்தேகத்தை வரவழைக்கிறது என்றும் இது குறித்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்றும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் அந்த மாணவி தேர்ச்சி பெறாததால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.