Forest Guard Bravery to Lion : நாம் மனிதர்களாக இருக்க, அவர்களுக்கு நடுவே நாய், பூனை, எருமை உள்ளிட்ட விலங்குகள் சாதாரணமாக நடமாடுவது இயல்பான ஒன்று தான். ஆனால் அதே நேரத்தில் காட்டில் வாழும் மிருகங்களை வேண்டுமென்றால் நாம் தொலைக்காட்சிகளில் அது மொபைல் ஃபோனில் பார்த்து ரசிக்கலாம். அதைத் தாண்டி உயிரியல் பூங்காவிலும் சிங்கம், புலி உள்ளிட்ட ஆபத்து நிறைந்த மிருகங்களை நம்மால் தூரத்தில் இருந்து பார்க்க முடியும்.
ஆனால் அவற்றிற்கு அருகே நின்று கொண்டு நம்மால் புகைப்படம் எடுக்கவோ அல்லது சாதாரணமாக நாய், பூனை போன்று நிற்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது என்ற பதில் தான் சரியாக இருக்கும். சிங்கம், புலி என்றாலே பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருக்கும் சூழலில் அதன் அருகே நின்றால் என்னவாகும். அப்படி ஒரு சூழலில், எந்தவித பாதுகாப்பும் இன்றி காட்டிற்கு மத்தியில் இருந்த ரயில் தண்டவாளத்தில் வனத்துறை காவலாளி ஒருவர் மாடை விரட்டுவது போல சிங்கத்தை விரட்டியது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
துணிச்சல் தான்பா..
குஜராத் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அங்கே வனத்துறை அதிகாரி ஒருவர் சிங்கத்தை ஏதோ நாய் அல்லது எருமை மாட்டை வேகமாக விரட்டுவது போல சர்வ சாதாரணமாக எதிர்கொள்கிறார். அந்த பகுதி காடு நிறைந்த பகுதி என வீடியோ மூலம் தெரியும் நிலையில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே உள்ள கேட்டும் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பக்கத்தில் ரயில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரியும் நிலையில், சிங்கம் ஒன்று தண்டவாளத்திற்கு அருகே சுற்றித் திரிந்தபடி உள்ளது. ஒருவேளை ரயில் வேகமாக வந்து விட்டால் சிங்கத்தின் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்ற சூழலில் அப்பகுதியில் இருந்த வனத்துறை காவலாளி ஒருவர் கம்பை வைத்துக்கொண்டு அந்த சிங்கத்தை தண்டவாளம் தாண்டி செல்வதற்காக சைகை செய்கிறார்.
என்ன சைலண்டா போகுது..
இதை தூரத்தில் இருந்து நபர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க சிங்கமும் அந்த நபரின் பேச்சை கேட்டு தண்டவாளத்தை மிக ஆர்வமாக கடந்து மறுபுறம் செல்கிறது. ஆரம்பத்தில் ஒரு நொடி அந்த காவலாளியை நின்று பார்க்கும் சிங்கம் அதன் பின்னர் எந்தவித ஆபத்தையும் மேற்கொள்ள நினைக்காமல் சாலைகளில் நாய்கள் நடந்து செல்வது போல தனது வேலையில் மும்முரம் காட்டி கடந்து செல்கிறது.
சிங்கம எதுவும் செய்யாமலே அந்த வீடியோவில் காவலாளியிடம் இருந்து சில தூரம் தள்ளி செல்ல இன்னொரு புறம் அவர் அவரது துணிச்சலான செயலுக்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கையில் சிங்கத்திடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கையில் எந்த விதமான உபகரணங்களும் இல்லை என்ற போதிலும் அந்த காவலாளியிடம் இருந்த துணிச்சல் தான் தற்போது பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.