தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி.. நெகிழ்ச்சியான குஜராத்

ஒரு குடும்பத்தின் பொருளாதாரத் தூணாய் தந்தை இருக்கிறார். தற்போது இருபாலரும் பணிக்குச் சென்றாலும் தந்தையின் கடமைகளாக படிக்க வைப்பது, பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது போன்றவை இருக்கிறது. திடீரென தந்தையை இழக்கும் போது அக்குடும்பமே…

Mahesh Savani

ஒரு குடும்பத்தின் பொருளாதாரத் தூணாய் தந்தை இருக்கிறார். தற்போது இருபாலரும் பணிக்குச் சென்றாலும் தந்தையின் கடமைகளாக படிக்க வைப்பது, பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது போன்றவை இருக்கிறது. திடீரென தந்தையை இழக்கும் போது அக்குடும்பமே நிலைகுலைகிறது.

இவ்வாறு தந்தையை இழந்த குடும்பங்களில் திருமண வயதை அடைந்த ஏழைப் பெண்களுக்கு தந்தையாக உருவெடுத்து அவர்களின் திருமணத்தினை தன் சொந்த செலவில் வருடந்தோறும் நடத்தி வைக்கிறார் குஜராத்தினைச் சேர்ந்த வைர வியாபாரியான மஹேஷ் சவானி.

ஒருவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு உதவும் போதுதான் அந்த செல்வத்திற்கே ஒரு மரியாதை கிடைக்கிறது. அந்த வகையில் மஹேஷ் சவானி கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருந்தாலும் பிறருக்கு உதவும் நல்ல உள்ளத்தினையும் கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

சென்னை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 4-வது ரயில்முனையமாக உருவாகும் பெரம்பூர்

கடந்த 2008-ம் ஆண்டு இவரிடம் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் திடீரென இறந்து போக அக்குடும்பத்தில் திருமண வயதினை எட்டிய பெண்ணுக்கு முதன் முதலாக தன் சொந்த செலவில் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் மஹேஷ் சவானி. அன்று ஆரம்பித்த இந்நிகழ்வு நாளடைவில் இதுபோன்று தந்தையை இழந்த பெண்களுக்கு வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருமணம் நடத்தி வைக்கும் உன்னத பணியை இடைவிடாது செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று மஹேஷ் சவானி அதேபோல் தந்தையை இழந்த சுமார் 111 பெண்களுக்கு தனது சொந்த செலவில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளுடன் வெகு விமரிசையாகத் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் இந்த வைர வியாபாரி. இவரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.