அம்மாடியோ 365 வகை உணவுகளுடன் விருந்தா? வருங்கால மருமகனுக்கு பொங்கல் விருந்து படைத்த தாத்தா!

ஆந்திராவில் திருமண நிச்சயதார்த்தம் ஆன தன்னுடைய பேத்தி மற்றும் பேத்தியின் வருங்கால கணவருக்கு தாத்தா, பாட்டி இருவரும் பொங்கல் விருந்தாக 365 வகையான உணவுகளைப் பரிமாரி ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள…

Untitled 51

ஆந்திராவில் திருமண நிச்சயதார்த்தம் ஆன தன்னுடைய பேத்தி மற்றும் பேத்தியின் வருங்கால கணவருக்கு தாத்தா, பாட்டி இருவரும் பொங்கல் விருந்தாக 365 வகையான உணவுகளைப் பரிமாரி ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் வெங்கடேஸ்வர ராவ் – மாதவி ஆகியோரின் மகள் குந்தவிக்கு தும்மலப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த சாய் கிருஷ்ணாவுடன் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கான தேதி இன்னும் குறிக்கப்படாத நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சாய் கிருஷ்ணாவிற்கு குந்தவியின் தாத்தா கோவிந்த், பாட்டி நாகமணி ஆகியோர் மாப்பிள்ளை விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மாப்பிள்ளை விருந்துக்குச் சென்ற சாய் கிருஷ்ணா இன்ப அதிர்ச்சியில் மூழ்கி விட்டார்.

தாத்தா பாட்டி இருவரும் இணைந்து இனிப்புகள், கார வகைகள், காய்கறிகள், நொறுக்குத் தீனிகள், சாப்பாட்டு வகைகள், பழங்கள் என மொத்தமாக 365 வகையான உணவுகளைத் தயார் செய்து பரிமாறி உள்ளனர்.

மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவு வகைகளுடன் விருந்தா என அப்பகுதி மக்கள் ஷாக் ஆகியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன