ஏஐ மூலம் துல்லியமான மொழிபெயர்ப்பு.. கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சி..!

By Bala Siva

Published:

 

பிற மொழிகளில் உள்ளவற்றை தமிழில் மொழிபெயர்க்க Google Translate உதவியாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், கடந்த சில மாதங்களாக, ஒரு இணையதளப் பக்கத்தையே மொழிபெயர்க்கும் வசதியையும் Google வழங்கி வருகிறது.

ஆனால், அதே சமயம், இந்த மொழிபெயர்ப்பு துல்லியமாக இல்லாமல் 50% மட்டுமே சரியாக இருக்கும் என்றும், இந்த மொழிபெயர்ப்பு மூலம் பக்கத்தில் என்ன சொல்லியிருக்கும் என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்; ஆனால் முழுமையாக பயன்படுத்த முடியாது என்றும் பயனர்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்த சூழலில், Google நிறுவனம் துல்லியமான மொழிபெயர்ப்புக்காக ஏஐ மெஷின் லேர்னிங் மற்றும்  API மூலம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் சில மாதங்களில் Google Translate மிக துல்லியமாக இயங்கக்கூடியதாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே Chat Gpt உள்ளிட்ட ஏஐ சாட்போட், துல்லியமான மொழிபெயர்ப்பை கொடுத்து வரும் நிலையில் Google Translate இணையதளத்தை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து Google நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.