கூகுள் நிறுவனம் தனது சியர்ச் எஞ்சின் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே மாதிரி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், Chatgpt, Grok ஆகியவற்றின் போட்டி காரணமாக தற்போது மேம்படுத்த உள்ளதாகவும், ஏஐ அம்சத்துடன் கூடிய சியர்ச் எஞ்சின் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூகுள் சர்ச் எஞ்சின் தனித்தன்மையுடன் போட்டியே இல்லாமல் இருந்தது என்பதும், எந்த ஒரு விவரங்களை தேட வேண்டும் என்றாலும், உலகில் உள்ள அனைவருமே கூகுள் சியர்ச் எஞ்சினை மட்டுமே நம்பி இருந்த காலமும் உண்டு. ஆனால் தற்போது ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு, hatgpt, Grok போன்றவற்றில் பொதுமக்கள் தேட ஆரம்பித்து விட்டனர் என்பதும், கூகுள் சியர்ச் எஞ்சினை இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் மறந்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் சர்ச் எஞ்சினை ஏஐ அம்சத்துடன் மாற்ற இருப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கூகுள் சியர்ச் எஞ்சின், ஏஐ அம்சத்துடன் மாற்றப்பட உள்ளதாகவும், இது பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் ஏஐ டெக்னாலஜி ஜெமினி நல்ல ரிசல்ட் கொடுத்து வரும் நிலையில், தற்போது கூகுள் சியர்ச் என்ஜினியிலும் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்த அவர் முடிவு செய்துள்ளது. பயனர்களுக்கு பெரும் நன்மையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.