அந்தரத்தில் பறந்த கார்.. கூகுள் மேப்பால் வந்த வினை.. துடிதுடித்து பலியான 3 உயிர்கள்

By John A

Published:

தெரியாத ஊர்களில் இப்போது எதற்கெடுத்தாலும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் செல்வதற்கு உள்ளூர்காரர்களை நம்புகிறோமோ இல்லையோ.. கூகுள் மேப்பை நம்பி தைரியமாகச் செல்கிறோம். ஒருவகையில் கூகுள் மேம் உதவி அளப்பறியது என்றாலும் அதுவே சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. அப்படி ஒரு விபத்து தான் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்திலிருந்து படாவுன் மாவட்டத்திலுள்ள டேடாகஞ்ச் என்ற ஊருக்கு கார் ஒன்று சென்றுள்ளது.

இந்தக் காரில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பயணித்துள்ளனர். செல்லும் இடத்திற்கு வழி தெரியாத அவர்கள் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளனர். அதன்படி கூகுள் மேப் காட்டி வழிகளில் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தவர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் தங்கள் விதி முடியப் போகிறது என்பதை அறியவில்லை. கூகுள் மேப் காட்டிய பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் எதிரே உள்ள பாலம் முழுவதும் கட்டப்படாமல் இருக்க அதை அவர்கள் அறியவில்லை.

ஏடிஎம்-இல் இருந்து வந்த பணத்தை முழுவதும் எடுக்காத கஸ்டமர்.. லட்சக்கணக்கில் மோசடி..!

மேலும் பாலம் குறித்த எச்சரிக்கைத் தகவல்களும் எதுவும் இல்லை. இதனால் அந்தப் பாலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் பாலத்தின் மீதிருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கார் வேகமாக விழுக சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 2022-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தக் கார் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனை அறியாத அவர்கள் அப்பாதையில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் கூகுள் மேப் அப்டேட் செய்யவில்லை என காவல் துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்பினை நம்பிச் சென்றவர்களுக்கு போகும் வழியிலேயே முடிந்த விதியால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் துண்டிக்கப்பட்ட பாலத்தினை சீரமைக்காமல் விட்டதைக் கண்டு அப்பகுதி மக்கள் அரசின் அலட்சியத்தினை குற்றம் சாட்டினர். இனிமேல் தெரியாத இடங்களுக்குச் செல்லும் போது அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துச் செல்வது நல்லது. இல்லையெனில் இது போன்ற விபரீதங்கள் ஏற்படும் அபாயங்கள் அதிகம் உள்ளது.