கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், தனது சமூக வலைத்தளத்தில், “இன்டர்வியூ கொடுப்பதை விட இன்டர்வியூ எடுப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் மிகவும் சோர்ந்து போகிறேன்.” என்று பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளன.டெல்லியில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் அனு ஷர்மா என்ற பெண், தனது வேலை அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “என்னுடைய வேலையின் முக்கிய பகுதி இன்டர்வியூ எடுப்பதே. ஒவ்வொரு இன்டர்வியூவும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீள்கிறது. ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட இன்டர்வியூக்களை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இன்டர்வியூ கொடுப்பது ரொம்ப ஈஸி, ஆனால் இன்டர்வியூ எடுப்பது ரொம்ப கஷ்டம் என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது.” என்று கூறியுள்ளார்.
அதோடு, “இன்டர்வியூ எடுக்கும் போது, இன்டர்வியூ கொடுக்க வருபவருடன் இணைந்து பிரச்சனையை தீர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, ஒரு நபர், “கூகுளில் நான் பணி செய்ய விரும்புகிறேன். எந்த விதமான கேள்விகள் கேட்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்கு அனு ஷர்மா “இல்லை, என்னால் அதை சொல்ல முடியாது.” என்று பதிலளித்தார். மேலும், “குறைந்த பட்சம் எந்த தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதை சொல்ல முடியுமா?” என்ற கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அனு சர்மாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து, “இன்டர்வியூ எடுக்கும் ஒரு HR பெண்மணியின் வேலையும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது போல!” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.