கூகுளின் ஏஐ டெக்னாலஜி அம்சத்தில் இருமல் சத்தத்தை வைத்து அந்த நபருக்கு என்ன நோய் இருக்கிறதை இருக்கும் என்பதை கண்டுபிடிக்கும் வசதி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏஐ டெக்னாலஜி தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மருத்துவத் துறைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் ஏஐ டெக்னாலஜியில் இருமல், மூச்சு விடுதல் ஆகியவற்றை வைத்து சில நோய்களை கண்டுபிடிக்கலாம் என்றும் குறிப்பாக இருமல் சத்தத்தை வைத்து காசநோய் மற்றும் நுரையீரல் ஆகிய நோய்களை ஏஐ டெக்னாலஜி கண்டுபிடித்து விடும் என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மருத்துவ உபகரணம் செய்யும் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது என்பதும் இந்த நிறுவனத்தின் மூலம் ஏஐ டெக்னாலஜி உதவியால் நோய்களை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் இருமல் சத்தத்தை வைத்து நுரையீரலில் உள்ள நோய்கள் மற்றும் காச நோய்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்கப்படும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருமல் சத்தத்தின் மூலம் நோய்களை கண்டுபிடிப்பதற்காக 300 மில்லியன் டேட்டாக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இருமல் வரும் போது வெவ்வேறு விதமாக சத்தம் கேட்கும் நிலையில் அந்த சத்தத்தை வைத்து அந்த நபருக்கு உரிய நோய் என்ன என்பதை கண்டுபிடித்து விடும் வகையில் இருப்பதாகவும் இது மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த நடைமுறை வெற்றிகரமாக அமலுக்கு வந்தால் பல நோய்களை முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.