மத்திய பட்ஜெட் 2024-25: தமிழ்நாடு புறக்கணிப்பு.. தங்கம், வெள்ளிக்கு வரி குறைப்பு..

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே…

gold

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகியவற்றுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நிதியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதேபோல் புதிய ரயில் திட்டங்களுக்கும் குறிப்பாக மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இந்த கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை என்பது இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இருந்து தெரிகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு எந்த ஒரு புதிய அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்பது தமிழக மற்றும் மக்களுக்கு பெரும் ஏமாற்றமே அளித்துள்ளது.

இந்த நிலையில் தங்கம், வெள்ளி பிளாட்டினம், வைரம் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. தங்கம் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது .

பிளாட்டினம் மீதான சுங்க வரியும் 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்றும் வைரத்திற்கு இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ,மற்றும் வைரம் ஆகியவை விலை குறையும் என்று கூறப்படுகிறது.