உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. வரும் தீபாவளிக்குள் ரூ.75,000 என உயருமா?

By Bala Siva

Published:

 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி கொண்டிருக்கும் நிலையில், வரும் தீபாவளிக்குள் ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரம் ரூபாய் ஆக உயர வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் கூறுவது, பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பக்கம் லெபனான்  மற்றும் இஸ்ரேல் போர், மற்றொரு பக்கம் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்தது போன்ற காரணங்களால் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி, பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் தற்போது ஆபரண தங்கம் ஒரு கிராம் 7,000 ரூபாய் என்றும், ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளிக்குள், அதாவது நவம்பர் மாதத்திற்குள், ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரம் ரூபாய் ஆக உயர வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் கூறுவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை இன்னும் சில ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் ஆக உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அந்த முன்னறிவிப்பு தற்போது உண்மை அடையும் போல் தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில், தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை எட்டும் என்று கூறப்படுகிறது.