தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

  தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை யாராலும் கணிக்க முடியாது என்றும் இது சர்வதேச சந்தையை சார்ந்தது என்பதால் சர்வதேச அளவில் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் பொருளாதார வல்லுநர்கள்…

Chennai Gold rate likely to fall below 50000 per pavan and a Savaran down Rs 3,360 in last 6 days

 

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை யாராலும் கணிக்க முடியாது என்றும் இது சர்வதேச சந்தையை சார்ந்தது என்பதால் சர்வதேச அளவில் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் பொருளாதார வல்லுநர்கள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை கணிக்க முடியும் என்றும் தொடர்ந்து தங்கம் சரியுமா அல்லது ஏற்றம் பெறுமா என்பதை தங்கம் குறித்த செய்திகளை கூர்ந்து கவனித்தால் தங்க விலை ஏற்ற இறக்கத்தை கணிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

உலகளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கணிக்கலாம் என்றும் குறிப்பாக அமெரிக்காவின் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவற்றை வைத்து தங்கம் விலை ஏறுமா இறங்குமா என்பதை கணித்துக் கொள்ளலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், தங்கத்தின் பயன்பாடு உலகளவில் நுகர்வோர் இடத்தில் எவ்வாறு உள்ளது என்ற செய்திகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், அவ்வாறு கவனித்தால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை மிகவும் துல்லியமாக கணித்து விடலாம் என்று கூறப்படுகிறது.

தங்கம் என்பது ஒரு உறுதியான லாபம் தரக்கூடிய முதலீடு என்பதால், அதில் முதலீடு செய்ய ஏராளமான முன்வந்து கொண்டிருக்கின்றனர் என்றும், எனவே தங்கத்தை பொருத்தவரை நீண்டகால முதலீட்டிற்கு நிச்சயம் லாபம் தரும் என்றும், குறுகிய கால முதலீட்டிற்கு லாபம் தரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எப்போது வாங்கினாலும், அதை நீண்டகால முதலீட்டுக்காக வாங்கினால் நிச்சயம் லாபம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.