ஜிமெயில் பயனர்களை குறிவைத்து தற்போது புதுவிதமான மோசடி நடந்து வரும் நிலையில், ஜிமெயில் பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், உங்கள் ஜிமெயிலில் உள்ள மொத்த டேட்டாவும் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜிமெயில் பயனர்களுக்கு வரும் மெசேஜில் உங்கள் ஜிமெயில் ஹேக் செய்யும் ஆபத்தில் உள்ளது, அதனை பாதுகாப்பதுடன் வைத்துக் கொள்ளுங்கள் என்றும், அதற்கு நாங்கள் உதவுகிறோம் என்றும் ஜிமெயிலில் இருந்தே வேண்டுகோள் வரும்.
அதன் பின்னர் தொலைபேசி மூலம் “ஜிமெயிலில் இருந்து பேசுகிறோம்” என்று கூறி, உங்கள் ஜிமெயில் கணக்கை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
அதன் பிறகு, அந்த நபர்களை நீங்கள் நம்பி, உங்கள் ஜிமெயிலில் உள்ளே செல்ல அனுமதி செய்துவிட்டால், உடனே ஒரு புதிய மின்னஞ்சல் அனுப்புவார்கள். அந்த மின்னஞ்சலை நீங்கள் கிளிக் செய்துவிட்டால், உடனே உங்களுடைய ஜிமெயில் முழுமையாக அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்.
எனவே, எந்த ஒரு மீட்புக்கோரிக்கை வந்தாலும் அதை ஏற்க வேண்டாம். பொதுவாக, ஜிமெயில் தங்கள் பயனர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள மாட்டார்கள். எனவே, “ஜிமெயிலில் இருந்து பேசுகிறோம்” என்று சொன்னால், உடனடியாக அதை துண்டிக்க வேண்டும். இவ்வாறு எச்சரிக்கையுடன் செயல்பட்டால், உங்கள் ஜிமெயில் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.