மூத்த பத்திரிகையாளர் கோலகலா ஸ்ரீனிவாசன் ஒரு நேர்காணலில், இந்தியாவின் வெளியுறவு கொள்கை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகள் குறித்து விரிவாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது 50% வரை வரியை விதித்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு சுமார் ₹3,70,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக, இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆசியான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் மாற்று வர்த்தக வழிகளை ஆராய்ந்து வருகிறது.
இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றது ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், சீனா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளும் பகல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டன.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து ரஷ்யா ஒரு நிலையான கூட்டாளியாக இருந்து வருகிறது. அதேபோல், அமெரிக்காவுடன் இரு நாடுகளுக்கும் உள்ள சவால்களின் பின்னணியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்து வருகிறது.
2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% ஆக உயர்ந்துள்ளது. இது, “ஆத்மநிர்பர் பாரத்” மற்றும் “மேக் இன் இந்தியா” போன்ற திட்டங்களின் வெற்றியைக் காட்டுகிறது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளை அமெரிக்கா தனது ஆதிக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகக் லகலா ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார். லிபியாவின் முஅம்மர் கடாபி மற்றும் ஈராக்கின் சதாம் உசேன் போன்ற தலைவர்கள், அமெரிக்க டாலரை சாராத பொருளாதார அமைப்புகளை உருவாக்க முயன்றதால் வீழ்த்தப்பட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இப்போது மோடி உள்பட பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் மீண்டும் டாலருக்கு பதிலாக ஒரு பொது கரன்சியை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த முறை வீழ்வது அமெரிக்காவாக தான் இருக்கும். ஏனெனில் புதின், மோடி போன்ற வலிமையான தலைவர்களை டிரம்பால் கனவில் கூட வீழ்த்த முடியாது என்பது தான் உண்மை,.!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
