உங்களுக்கு சொந்தமான இடத்தை வங்கி அல்லது ATM நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவது உறுதியான மற்றும் பாதுகாப்பான மாத வருமானம் ஈட்டும் ஒரு சிறந்த முறையாக மாறியுள்ளது. செமி-அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் பண பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், வங்கிகள் ATM போக்குவரத்தை விரிவுபடுத்துவதில் ஆர்வமாக உள்ளன. இதனால் சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு நிலையான வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உருவாகிறது.
உங்கள் சொத்தை ATM அமைப்பிற்காக வாடகைக்கு விடுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இதோ:
1. உங்கள் சொத்து இருப்பிடத்தை மதிப்பீடு செய்யவும். ATM-கள் பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தான் நிறுவப்படுகின்றன. அதாவது பெரிய சந்தைகள், குடியிருப்பு பகுதி, ரயில்வே நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்கள் மிகவும் சிறப்பானவை.
மேற்கண்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இடமிருந்தால் வங்கிகள் RBI-யின் ATM புள்ளிவிவரங்களை பயன்படுத்தி ஏற்ற இடங்களை தேர்வு செய்கின்றன. உங்கள் பகுதியில் உள்ள ATM எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதையும் கவனிக்க வேண்டும்.
2. உங்கள் இடம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறதா என்பதை சரிபார்க்கவும்
வங்கிகள் மற்றும் White-Label ATM (WLA) இயக்குபவர்கள் பின்வரும் தேவைகளை எதிர்பார்க்கிறார்கள்:
40 முதல் 100 சதுர அடி இடம், இடம் கண்டிப்பாக தரைத்தளத்தில் இருக்க வேண்டும். தொடர்ந்த மின்சாரம் மற்றும் இன்வெர்டர் வசதி. இணைய வசதி மற்றும் விளம்பரம் செய்வதற்கான இடங்கள், பாதுகாப்பான சூழல் குறிப்பாக சிசிடிவி வசதி இருக்க வேண்டும்.
3. மேற்கண்ட வசதிகள் இருந்தால் வங்கிகள் அல்லது ATM நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக அரசு/தனியார் வங்கிகள் (SBI, HDFC, ICICI, Axis Bank)
மற்றும் White-Label ATM (WLA) நிறுவனங்களான India1 Payments, Tata Indicash
Hitachi Payment Services ஆகியவைகளை அணுகலாம். மேலும் MagicBricks, 99acres போன்ற ஆன்லைன் ரியல் எஸ்டேட் தளங்களில் பதிவு செய்யலாம்
வங்கிகள் உங்கள் இடத்தை தேர்வு செய்தால் அதன்பின் வாடகை விண்ணப்பம் குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவும். வங்கிகளுக்கு நீங்கள் பின்வரும் தகவல்களை வழங்க வேண்டும். அவை சொத்து விவரங்கள் மற்றும் இடத்தின் புகைப்படங்கள். மேலும் உங்கள் சொத்துக்கான உரிமை ஆவணங்கள், தேவைப்பட்டால் குடியிருப்பு சங்க அனுமதி ஆகியவை தேவை. மேல்லும் எதிர்பார்க்கும் வாடகை தொகை மற்றும் அட்வான்ஸ் தொகை, மின்சார வசதி, தண்ணீர் வசதி போன்ற விவரங்களையும் வங்கிகள் கேட்கும்.
எல்லாம் ஓகே என்றால் வங்கிகள் தள ஆய்வு மேற்கொண்டு முடிவெடுக்கும். அதன்பின் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்படும். பொதுவாக 5 முதல் 10 வருடங்கள் வரை வாடகை ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். வங்கிகள்/WLA-கள் ATM, மின்சார ஆதரவு, பாதுகாப்பு போன்றவை நிறுவுவார்கள். சில நிறுவனங்கள் முன்கூட்டியே தொகை அல்லது மீட்டெடுக்கக்கூடிய பத்திரத்தொகை வழங்கலாம். ஒப்பந்தம் நோட்டரி செய்யப்பட்டு, பராமரிப்பு, அணுகல் நேரம், விளம்பர அனுமதி போன்ற விதிமுறைகள் உள்ளடக்கப்படும்.
ATM வாடகை மூலம் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம்?என்பதை தற்போது பார்ப்போம். மெட்ரோ நகரங்களில் இடமிருந்தால் மாத வாடகை ₹25,000 – ₹60,000 வரை கிடைக்கலாம். Tier-2 நகரங்களில் இடமிருந்தால்₹15,000 – ₹35,000 வரையும் செமி-அர்பன் பகுதிகள் என்றால் ₹8,000 – ₹20,000 வரையும் கிராமப்புற என்றால் ₹3,000 – ₹10,000 வரை கிடைக்கும்,