கடந்த சில நாட்களாக சாட் ஜிபிடியின் ஜிப்ளி இமேஜ் இந்த உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதும், ஒரே நாளில் மில்லியன் கணக்கான இமேஜ்கள் பயனர்களுக்காக உருவாக்கி கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓபன் ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் அவர்களே இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை யூகித்துப் பார்க்கவில்லை என்றும், அவர் நினைத்ததை விட பல மடங்கு புதிய பயனர்கள் சாட் ஜிபிடிக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. சாட் ஜிபிடிமூலம் ஒரே வாரத்தில் 150 மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்கள் கிடைத்தனர் என்றும், இதனால் அதன் பயனர்களின் எண்ணிக்கை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜிப்ளி இமேஜ் பெற்ற மிகப்பெரிய வரவேற்பின் நம்பிக்கை காரணமாக தற்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக ஓபன் ஏஐ நிறுவனம் “Images v2” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஏஐ அம்சங்கள் மற்றும் புதிய வசதியுடன் இந்த புதிய இமேஜ் அம்சம் வர இருப்பதாகவும், இதுவரை இல்லாத அளவில் டிஜிட்டலில் இது ஒரு புரட்சியை செய்யும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
ஜிப்ளி இமேஜ் தான் உயர்ந்தது என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதை தூக்கி சாப்பிடும் அளவுக்கு “Images v2” என்ற அம்சம் வரயிருப்பதை அடுத்து, இந்த புதிய அம்சத்தை எதிர்பார்த்து பயனர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்