அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு மட்டுமே ஆப்பு.. AI குறித்த ஆய்வு அறிக்கை..!

By Bala Siva

Published:

கடந்த சில மாதங்களாக AI தொழில்நுட்பம் என்பது அனைவரும் பேசப்படும் ஒரு தொழில்நுட்பமாக மாறி உள்ளது என்பதும் இந்த தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த மே மாதத்தில் 40,000 பேர் உலகம் முழுவதும் வேலை இழந்துள்ள நிலையில் அதில் 8000 பேர் AI தொழில் நுட்பத்தால் மட்டுமே வேலை இழந்தார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் AI தொழில்நுட்பத்தால் அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்றும் குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இப்போதைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் மிக்கன்ஸி அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மனிதனுக்கு இணையாக அல்லது மனிதனை மிஞ்சும் வகையில் உள்ள AI தொழில்நுட்பம் என்பதும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும் அதற்கு பதிலாக அரசாங்கங்கள் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

AI தொழில்நுட்பம் மூலம் வேலை இழக்கும் ஊழியர்களுக்கு அந்தந்த நாட்டின் அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் மறுபெயர்ச்சி திட்டங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் என்பது ஒரு சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் என்றும் இது வேலைகளை சீரழிக்கும் திறனை கொண்டது என்று கூறப்பட்டாலும் அதிக ஊதியம் பெரும் ஊழியர்களை மட்டுமே இது உடனடியாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கண்டெண்ட் ரைட்டர்கள் மற்றும் எடிட்டர்கள் தங்கள் வேலையை இழக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் AI என்பது அவர்களுக்கு மாற்றான ஒரு தொழில் நுட்பமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சாஃப்ட்வேர் டெவலப்பர்கள், கோடிங் எழுதுபவர்கள், டெஸ்டிங் கோடு எழுதுபவர்கள், ஆகியோர்களுக்கு இனி வேலை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அதேபோல் போட்டோஷாப் டிசைனர்களுக்கும் மிகப்பெரிய வேலை இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நிதி போக்குகளை ஆய்வு செய்பவர்கள், நிதி தரவை பகுப்பாய்வு செய்பவர்கள், முதலீட்ட காண பரிந்துரை வழங்குபவர்கள் போன்ற பணிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை AI தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்ட வேலையில் இருப்பவர்கள் எல்லாமே அதிக ஊதியம் வாங்குபவர்கள் என்றும் குறைந்த ஊழிய ஊதியம் வாங்குபவர்களுக்கு இப்போதைக்கு AI தொழில்நுட்பத்தால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் இந்த அறிக்கையின் முடிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.