தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், களத்தில் இறங்கியுள்ள கருத்துக்கணிப்பு குழுவினருக்கே பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஊர் ஊராக சென்று மக்களிடம் கருத்து கேட்டால், அங்கிருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஒருமித்த குரலில் ‘விசில்’ சின்னத்திற்கே ஆதரவு தெரிவிப்பதாக கூறுகின்றனர். இது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் மாற்றம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பரவலாக தென்படும் ஒரு புதிய அரசியல் அலையாகப் பார்க்கப்படுகிறது.
முக்கியமாக ‘Gen Z’ என்று அழைக்கப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் தான் இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக இருக்கிறார்கள். இவர்கள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் விஜய்க்கு ஆதரவு தராமல், நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். தங்களுக்கு தெரிந்த விழிப்புணர்வை வைத்து, தங்கள் வீட்டில் இருக்கும் அம்மா மற்றும் அப்பாவையும் ‘மாற்றத்திற்காக’ விசிலுக்கு ஓட்டு போட சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் எடுக்கும் இந்த முடிவு, அந்த வீட்டின் ஒட்டுமொத்த வாக்கு வங்கியையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
விஜய்யின் கொள்கைகளும், அவரது மேடை பேச்சுகளும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய முகம், ஒரு புதிய நம்பிக்கை வேண்டுமென துடிக்கும் இளைஞர்களுக்கு விஜய் ஒரு சிறந்த மாற்றாக தெரிகிறார். “அவங்க 50 வருஷமா செஞ்சதையே நாங்களும் செய்ய மாட்டோம், நாங்க செய்யப்போறது வேற” என்ற அவரது முழக்கம் முதல்முறை வாக்காளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால் தான், பழைய அரசியல் கணக்குகளை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு விஜய் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறார்.
கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்கள் கூட இந்த வேகத்தை கண்டு மிரண்டு போயுள்ளன. ஆரம்பத்தில் வெறும் 15 முதல் 20 சதவீத வாக்குகள் வரை மட்டுமே தவெக பெறும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிப்ரவரி 2026-ன் நிலவரப்படி அது 30 சதவீதத்தை நெருங்கி வருவது ஆளும் திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் வாக்கு வங்கி என்பது மற்ற கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதாக மட்டும் இல்லாமல், புதிய வாக்காளர்களை அதிகளவில் உள்ளே கொண்டு வருவதாக உள்ளது.
தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ‘விசில்’ சத்தம் பலமாக கேட்க தொடங்கியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள தாய்மார்கள் கூட விஜய்யின் எளிமையையும், அவர் பேசும் சமூக பிரச்சனைகளையும் கவனித்து அவருக்கு ஆதரவு அளிக்க தொடங்கியுள்ளனர். இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் “இத்தனை வருஷம் அவங்களுக்கு ஓட்டு போட்டீங்க, இந்த ஒரு முறை எங்களுக்காக இவருக்குப் போடுங்க” என்று கேட்டு வாக்குகளைச் சேகரிப்பது தான் இந்த தேர்தலின் மிகப்பெரிய ‘கேம் சேஞ்சர்’ ஆக இருக்கப்போகிறது.
இப்போதைய நிலையைப் பார்த்தால், விஜய் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மும்முனை போட்டியில் 2 சதவீத வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய வெற்றியை தேடித் தரும். இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த ஆதரவு அலை இதே வேகத்தில் சென்றால் தமிழக அரசியல் வரலாற்றில் 2026 ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். விஜய் ஒரு தனி மனிதராக தொடங்கினாலும், இன்று ஒரு பெரும் இளைய படை அவருக்கு பின்னால் அரணாக நிற்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

