நடிகை கௌதமி நில மோசடி வழக்கு.. தலைமறைவாக இருந்த அழகப்பன் கைது..!

By Bala Siva

Published:

 

நடிகை கௌதமி நிலத்தை மோசடி செய்து தலைமறைவாக இருந்த அழகப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த கௌதமி, கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது நிலத்தை தன்னுடைய முன்னாள் மேலாளர் அழகப்பன் என்பவரும் அவரை சேர்ந்த சிலர் மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து கௌதமி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தகுந்த ஆவணங்களுடன் விளக்கம் அளித்தார். இதனை அடுத்து காவல்துறையினர் கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் அவருடைய மனைவி நாச்சியம்மாள் உட்பட ஆறு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அழகப்பன் குடும்பத்தோடு திடீரென தலைமறைவாக இருந்த நிலையில் 3 தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அழகப்பன் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.