கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!

By Bala Siva

Published:

கேஸ் இணைப்பை புதுப்பித்து தருகிறோம் என்ற பெயரில் புதுவித மோசடி நடப்பதாக நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது கேஸ் கம்பெனியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடைய விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இதை பயன்படுத்தி மோசடியாளர்கள் புதுவிதமான மோசடி ஒன்றை செய்து வருகின்றனர்.

கேஸ் இணைப்பு வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் அதை புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் சில போலியானவர்கள் கேஸ் இணைப்பு உள்ளவர்களிடம் போன் செய்து ’உங்கள் கேஸ் இணைப்பு புதுப்பிக்க வேண்டும், இல்லாவிட்டால் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் புதுப்பிப்பதற்கு ஆதார் எண், வங்கி விவரங்களை சொல்ல வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

ஒரு சிலர் நேரில் போய் புதுப்பிக்க சோம்பல் பட்டுக்கொண்டு ஆன்லைன் மூலமாக புதுப்பித்து விடலாம் என்று அனைத்து விவரங்களும் கூறுகிறார்கள். கேஸ் இணைப்பு மட்டுமின்றி ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை ஏன் கேட்கிறார்கள் என்பது கூட யோசிப்பதில்லை. இந்த விவரங்களை சொன்னவுடன் உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும், அந்த ஓடிபி எண்ணை கொடுத்தால் தான் புதுப்பிக்க முடியும் என்று மீண்டும் அதே மோசடி நபரிடம் இருந்து போன் வரும். நீங்கள் ஓடிபியை மட்டும் கொடுத்து விட்டால் உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிடும்.

ஆதார் எண், வங்கி எண்ணை மட்டும் அவர்கள் பயன்படுத்தி மோசடி செய்வதாகவும் கேஸ் புதுப்பிப்பது என்பது என்ற பெயரில் நடக்கும் இந்த மோசடி குறித்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: aadhar, fraud, gas