கொரோனா காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பின், வேலை நீக்க நடவடிக்கை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது, AI டெக்னாலஜி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக பல ஊழியர்கள் வேலை இழந்து வருவதாகவும், 2024 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் வேலை இழந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புள்ளி விவரத்தின்படி, உலகம் முழுவதும் 470 நிறுவனங்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கணினி நிறுவனமான இன்டெல் நிறுவனமும் நூற்றுக்கணக்கான பேரை வேலை நீக்கப்போவதாகவும், போன்பே நிறுவனமும் தனது 60% கஸ்டமர் சப்போர்ட் ஊழியர்களை வேலை நீக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த வேலை நீக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக AI டெக்னாலஜி முன்னேற்றம் மற்றும் செலவு குறைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளன.