இன்று முதல், ஏப்ரல் 1 முதல் உங்கள் பர்சுக்கு வேட்டு வைக்கும் பண மாற்றங்கள்..!

  ஏப்ரல் 1 முதல் பல்வேறு பணவியல் மாற்றங்கள் ஏற்பட இருக்கும் நிலையில் உங்கள் பணத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 1. வருமான வரி குறைப்பு.. புதிய திட்டம்…

purse

 

ஏப்ரல் 1 முதல் பல்வேறு பணவியல் மாற்றங்கள் ஏற்பட இருக்கும் நிலையில் உங்கள் பணத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

1. வருமான வரி குறைப்பு.. புதிய திட்டம் மிக அதிக நன்மைகள் வழங்குகிறது!

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரிய வரி குறைப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. புதிய வரி திட்டம் அதிகம் நன்மைகளை வழங்கும், ஏனென்றால் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை (சம்பளதாரர்களுக்கு ரூ.12.75 லட்சம் வரை) இருப்பவர்களுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. ஆனால் அவர்கள் வரிவிலக்கு பெறுவதற்கு ரூ. 60,000 வரை திருப்பித் தரப்படும் என்பதால் கணக்கீடு தாக்கல் செய்ய வேண்டும்.

ரூ. 24 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் பழைய வரி திட்டத்தில் பயனடைய வேண்டும் எனில் குறைந்தது ரூ. 8 லட்சம் கழிவு பிரிவுகளில் (80C, 80D, 24b) முதலீடு செய்ய வேண்டும்.

2. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் குறையும், வீட்டு கடன் வட்டி குறையலாம்!

பிப்ரவரி 2025 இல் ரிசர்வ் வங்கி தனது ரெபோ விகிதத்தை 6.25% ஆக 25 புள்ளிகள் குறைத்தது/ இது கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு குறைப்பு நடவடிக்கை ஆகும். இந்த நிலையில் ஏப்ரல் 7-9 வரை RBI’s MPC கூட்டம் நடைபெறுகிறது, மேலும் ஒரு 25 புள்ளி விகிதம் குறைக்க வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 9ல் ரெபோ விகிதம் 6% ஆக குறையலாம் என 60 பொருளாதார நிபுணர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் 54 பேர் எதிர்பார்க்கிறார்கள்.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வீட்டுக் கடன்கள் குறைந்தால், தற்போதைய கடனாளிகளுக்கும் புதிய கடன் பெறுபவர்களுக்கும் நன்மை கிடைக்கும். .

3. SEBIயின் புதிய விதிகள்.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய மாற்றங்கள்

SEBI புதிய நிதி திட்டங்களுக்கான கடுமையான வழிமுறைகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல், Asset Management Companies (AMCs) புதிய நிதி திட்டங்களுக்கான (NFOs) பணத்தை 30 நாட்களுக்குள் முதலீடு செய்ய வேண்டும். 60 நாட்கள் வரை அவகாசம் கோரலாம், ஆனால் ஓரே ஒரு முறை மட்டும் மற்றும் நிறுவனத்தின் முதலீட்டு குழுவின் அனுமதி பெற வேண்டும். 60 நாட்களுக்குள் முதலீடு செய்யவில்லை என்றால்
புதிய முதலீடுகளை நிறுத்த வேண்டும்.

4. கிரெடிட் கார்ட் பரிசுப் புள்ளி மாற்றங்கள்! SBI Card – பரிசுப் புள்ளிகள் குறைப்பு!

SimplyCLICK SBI Card: Swiggy டிரான்சாக்ஷன்களுக்கு 10X ரிவார்ட் புள்ளிகள் -> 5X ஆக குறையும்.

Air India SBI Platinum Card: Air India டிக்கெட் வாங்கும்போது 100 ரூபாய்க்கு 15 புள்ளிகள் என்பது 5 புள்ளிகள் என குறையும்

Air India SBI Signature Card: 100 ரூபாய்க்கு 30 புள்ளிகள் என இருந்த நிலையில் இனு 10 புள்ளிகள் என மாறும்

Axis Bank – Vistara Cardல் Vistara – Air India இணைப்பு காரணமாக, ஏப்ரல் 18 முதல் Vistara Credit Card-ல் ஏனைய உறுப்பினர் சலுகைகள் நிறுத்தப்படும்.